வெள்ளி, 29 ஜூலை, 2016

பொற்காசு குவியல்விபச்சார கப்பலில்!!!

80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய விபச்சார கப்பல் சிதிலமடைந்த நிலையில், தற்போது தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது. இந்த கப்பலில் பொற்காகாசு குவியல் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கப்பலை காண மக்கள் கூட்டம் வருவதால் பரபரப்பு 
ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையோரும் புதைந்து கிடக்கும் அந்த கப்பல் அலையின் சீற்றத்தால், தற்போது மெல்ல வெளியில் தெரியத் துவங்கியிருக்கிறது. இந்த கப்பல் தற்போது பல அமெரிக்க ஊடகங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் வழியாக இந்த கப்பல் பற்றி தெரிவிக்கப்படும் சுவாரஸ்யத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
சரக்கு‘ கப்பல்
1921ம் ஆண்டு எஸ்எஸ் மான்டி கார்லோ என்ற பெயரில் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான ஆயில் டேங்கர் கப்பலாக அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், மது அருந்தும் பார், நடன அரங்கம், சூதாட்ட விடுதி, விபச்சார விடுதி என ஒரே குடையின் கீழ்
 பல்வேறு ‚சேவை’களை வழங்கும் விசேஷ கப்பலாக மாற்றப்பட்டது.
ன்ன ஐடியா…
அந்த காலத்தில் சூதாட்டம், விபச்சாரம் சட்டவிரோத செயல்களாக இருந்ததால், இந்த கப்பலை கடற்கரையோரம் நிறுத்த முடியாது. எனவே, அந்நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து 3 மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தி மேற்கண்ட சட்டவிரோத சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர் இதன் நிர்வாகிகள்.
புத்தாண்டு பார்ட்டி
கடந்த 1937ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏராளமானோர் இந்த கப்பலில் கூடியிருந்தனர். புத்தாண்டு பார்ட்டியும் அமர்க்களமாக நடந்தது. ஆனால், அன்றே இந்த கப்பலின் அந்திம தினமாகவும் மாறியது.
புத்தாண்டு பார்ட்டி
கடந்த 1937ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏராளமானோர் இந்த கப்பலில் கூடியிருந்தனர். புத்தாண்டு பார்ட்டியும் அமர்க்களமாக நடந்தது. ஆனால், அன்றே இந்த கப்பலின் அந்திம தினமாகவும் மாறியது.
சூறாவளியின் கோர தாண்டவம்
சூறாவளியின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் அலைகழிந்ததால், நங்கூரம் பயனற்று போனது. கப்பல் திக்கு தெரியாமல் பயணித்து, கடைசியில் கலிஃபோர்னியா கடற்கரையோரம் வந்து தரைதட்டியது.
கப்சிப்
சட்டவிரோத செயல்கள் நடைபெற்ற கப்பல் என்பதால், இந்த கப்பலை உரிமை கோர அதன் நிர்வாகிகள் முன்வரவில்லை. இதனால், அந்த கப்பல் தரைதட்டி, மணலில் புதைந்தது.
தரைதட்டிய இடம்
எல் கேமினோ டவர் அமைந்திருக்கும் கொரனாடோ கடற்கரை பகுதியில்தான் தற்போது இந்த கப்பல் கிடக்கிறது. மேலும், அலை சீற்றத்தால், மணல் நீங்கி கப்பல் வெளியில் தெரிகிறது. இதனை காண்பதற்கு பலர் அங்கு கூடி வருகின்றனர். மீடியாவை சேர்ந்தவர்களும், டாக்குமென்ட்ரிகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.
காலக் கண்ணாடி
அப்போது செல்வந்தர்கள் இந்த கப்பலுக்கு செல்வதை தங்களது அந்தஸ்தின் அடையாளமாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறும் இடமாக கருதினர். மேலும், இந்த கப்பலை காலக் கண்ணாடியாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஹாலிவுட் படம்
இந்த கப்பலின் கதையை மையமாக வைத்து கேம்ளிங் ஷிப் என்ற பெயரில் ஹாலிவுட் படம் கூட வந்துவிட்டது. இந்த படத்தில் கேரி கிராண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.
சீக்ரெட்
இந்த கப்பலில் சூதாட்டத்திற்கும், விபச்சாரத்திற்குமாக எக்கச்சக்கமாக பணமும், நாணயங்களும் புழங்கியிருக்கினறன. மேலும், இந்த கப்பலில் இருந்து வெள்ளி மற்றும் பொற்காசுகளை எடுத்திருப்பதாக தனது நினைவலைகளை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், இந்த கப்பலில் பொற்காசுகள் மற்றும் வெள்ளிக் காசு குவியல் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எல் நினோதான் காரணமாம்…
இதுவரை மணலால் மூடியிருந்த கப்பல் வெளியில் தெரிவதற்கு எல் நினோதான் காரணமாம். எல் நினோ பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட காற்றின் வேகமும், கடல் அலையின் சீற்றமும் இணைந்து இந்த கப்பலை பல அடிகள் மூடியிருந்த மணலை நீக்கியிருப்பதாக
 கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 28 ஜூலை, 2016

மூன்றாவது முறையாக தொடர்ச்சியான மின்னொளியிலான உதைபந்தாட்டம்

புத்தூர்எவறஸ்ட் வி.க நடாத்திவரும் வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்தவருடமும் மின்னொளியில் இடம்பெறவுள்ளது இதற்கு முன்னர் 2012,2014,ஆகிய வருடங்களில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மின்னொளியில் இடம்பெற்றன 
இவ்வருடம் சுப்பர்08 போட்டியில்
 இருந்து மின்னொளியில் மிகவும் பிரமாண்டமான முறையில் யாழ்உதைபந்தாட்டலீக்கின் ஆதரவில் கழக மைதானத்தில் என்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என்பதனை உதைபந்தாட்ட பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அறியத்தருகின்றனர் 




செவ்வாய், 26 ஜூலை, 2016

நவற்கிரி நிலாவரைக் கிணற்றில் கடற்படை சுழியோடிகள்?

கடற்படையின் விசேட சுழியோடி பிரிவினர் நிலாவரைக் கிணற்றை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலாவரைக் கிணறானது பல ஆண்டு காலமாக சுத்திகரிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதனால் அதனுள் பல ஆண்டுகாலமாக பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் சேர்ந்தே காணப்பட்டது.
கடற்படை உயரதிகாரி ஒருவர் தலைமையிலான விசேட ஆழ்கடல் சுழியோடிப் படைப் பிரிவினர் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுத்திகரிப்புப் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சுற்று மதிலின் ஒரு சிறிய பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தக் காட்சிகளைக் காண அப்பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரும் தற்கொலை செய்த ஒருவரின் சடலத்தை குறித்த கடற்படைச் சுழியோடிகள் மீட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், 25 ஜூலை, 2016

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடுமாம்!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் 
மாகாணங்களிலே இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை ஏற்படும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 23 ஜூலை, 2016

ரஜினி ரசிகர் விபரீத முடிவு கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!

கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும் என்ற மோகம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.ஆனால் மலேசியவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, டிக்கெட் கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக,
 அது திரையிடப்பட உள்ள 
மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், மாலின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இலங்கைப் பெண்ஹொலிவுட் திரைப்படத்தில்!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சேர்ந்த சலினி பீரிஸ் என்ற நடிகை , ஹொலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்றவர்.
2017 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஜஸ்டிக் லீக் பட த்தில் இவர் நடித்துள்ளார்.
ஜெக்கிலின் பெர்ணாண்டசின் பின்னர் ஹொலிவுட் திரைப்படத்தில் தோன்றவுள்ள இலங்கையர்
 இவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 21 ஜூலை, 2016

'ரஜினியின் கபாலி'திரைப்படத்தின் 2 நிமிட அறிமுக காட்சிகள் கசிந்தன!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகவுள்ள 'கபாலி' திரைப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் கசிந்துள்ளன. அதுவும், அவை ரஜினியின் அறிமுக காட்சிகள் என்பதால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் திரைப்படம் 'கபாலி'.
இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 2 நிமிட காட்சிகளால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
: முன்னர், 'கபாலி' திரைப்படத்தை கள்ளத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இச்சூழலில், திரைப்படத்தின் 2 நிமிட காட்சிகள் கசிந்தது குறித்து தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தாணு, '' தலைவர் படத்தை கைப்பேசி அல்லது கணினிகளில் பார்ப்பதால் உற்சாகம் கிடைக்காது '' என கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 20 ஜூலை, 2016

குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

இன்று வவுனியா குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறிநகர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 66 வயதான மயில்வாகனம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.
குறித்த நபரை மூன்று நாட்களாக காணவில்லை என வவுனியாபொலிஸ்நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் சற்று மனநிலை பாதிக்கப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 19 ஜூலை, 2016

பல்கலையில் கைகலப்பு: விசாரணைக் குழுவில் சிங்களவர்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 16ஆம் திகதி விஞ்ஞானபீட தமிழ்இ சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் யாழில் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் யாழ். மாவட்டத்தில் கடமையில் உள்ள சிங்கள இனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் சிங்களம் எழுதவோ வாசிக்கவோ சிறந்த பரீட்சையம் உடையவர்கள் எனவே இந்த விசாரணை என்பது நேர்த்தியாக இடம்பெறும். மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபடும்.
இனிமேல் இவ்வாறு பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும். எனவே நாம் மாணவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் தமது கல்வியினை தொடர்வதற்கு பல்கலைக்கழகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில்
 கல்வி செயற்பாடுகள்
 ஆரம்பிக்கப்படும். எனவே மாணவர்கள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 18 ஜூலை, 2016

பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது !


இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாதில், அறுவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் ஞாயிற்றுக்கிழமை
 மாலை 17.07.2016 இடம்பெற்ற இச்சம்பவத்தில், வாழைச்சேனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது. பஸ்ஸின் அதிகரித்த வேகமே இதற்குக் காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவயவந்திருக்கின்றது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்
. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 15 ஜூலை, 2016

கண்மூடித்தனமான கதற கதற டிரக்கை ஏற்றி கொலை செய்த கொலையாளி ?

பிரான்ஸின் நைஸ் நகரில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோதவிட்டு 80 பேர் உயிரை பலியெடுத்த இளைஞன் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேசிய தினத்தையொட்டி பிரான்ஸின் நைஸ் நகரில் பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதை கண்டு களித்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென வெடிபொருட்களைக் கொண்ட டிரக் ஒன்று கண்மூடித்தனமான வேகத்தில் மோதிய காணொளி,இணைப்பு           

                                                                             
இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இக்கொடூர தாக்குதலை நடத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.

 இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது துனியாவைச் சேர்ந்த 31-வது இளைஞர் என தற்போது தெரியவந்துள்ளது. அவர் நைஸ் நகரில் தங்கி இருந்து இப்படுபாதக தாக்குதலை நடத்தியிருக்கிறார்
                                                                 .  புகைபடங்கள் ,இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 14 ஜூலை, 2016

இன்று முதல் நாட்டில் 5 நாட்களுக்கு கடும் மழை?

நாட்டில் ஏற்பட்டுவரும்  காலநிலை மாற்றத்தால் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யலாம் என காலநிலை அவதான நிலையம் 
அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்  இருப்பதாகவும் குறிப்பாக மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் அந்நிலையம் எதிர்வு 
கூறியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஜூலை, 2016

கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை?

 கோவில் திருவிழாவில் மது குடித்து புதுமாப்பிள்ளை ஆடியதை உறவினர்கள் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை தச்ச நல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்தவர் துரைப்பாண்டி(வயது24) கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது குடும்ப கோவில் 
தாழையூத்தில் உள்ளது. 
இந்த கோவில் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது துரைப்பாண்டி மது குடித்துவிட்டு ஆடியுள்ளார். இதை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்தனராம். இதையடுத்து துரைப்பாண்டியின் தாய் மற்றும் வீட்டினர் அவரை கண்டித்தனர். 
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த துரைப்பாண்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவில் விழா முடித்து வீட்டுக்கு வந்த துரைப்பாண்டியின் பெற்றோர் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி 
அடைந்தனர். 
இதுபற்றி தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 1 ஜூலை, 2016

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு பாக்கெட்கக்கள் வழங்கப்பட்து !

கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழுகின்ற குடும்பங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் முகமாக முதற்கட்ட்மாக இன்று 30.06.2016 அம்பாள் நகர், ஆனந்தபுரம்,
 ஊற்றுப்புலம்,
 கோணாவில், விவேகாநந்த நகர், செல்வா நகர், திருநகர் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 151 பயனாளிகளுக்கு 1510 சிமெண்ட் பாக்கெட்களை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கி வைக்கப்படடன..
மேற்படி விடயம் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கூறுகையில்,
இச் செயற்பாட்டின் மூலம் நாடு பூராகவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3000 பயனாளிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டு அரை குறையாக உள்ள வீட்டின் முன்பக்க சுவர்களை
 சாந்து பூசி அழகுபடுத்துவதன்
 மூலம் அவர்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடு ஒரு முழுமையாக்கம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன்
 இவற்றை 
பெற்றுக்கொண்ட பயனாளிகள் இத்திட்டத்தை வீணாக்காமல் தங்களது வீடுகளை முழுமையாக்கும் செயற்ப்பாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்றப்பட வேண்டும் எனவும் பயனாளிகளை கேட்டுக்கொண்டதுடன் இவர்களின் வேலைதிடடம் தொடர்பாக எனது அலுவலர்களால் 
தொடர்ச்சியாக
 கண்காணிக்கப்பட்டு முன்னேற்ற அறிக்கை தேசிய வீடமைப்பின் மாவட்ட முகாமையாளருக்கும் அறிவிக்கப்படும் எனவும் அவர்
 அங்கு தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.