செவ்வாய், 19 ஜூலை, 2016

பல்கலையில் கைகலப்பு: விசாரணைக் குழுவில் சிங்களவர்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 16ஆம் திகதி விஞ்ஞானபீட தமிழ்இ சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் யாழில் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சம்பத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் யாழ். மாவட்டத்தில் கடமையில் உள்ள சிங்கள இனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் சிங்களம் எழுதவோ வாசிக்கவோ சிறந்த பரீட்சையம் உடையவர்கள் எனவே இந்த விசாரணை என்பது நேர்த்தியாக இடம்பெறும். மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபடும்.
இனிமேல் இவ்வாறு பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும். எனவே நாம் மாணவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் தமது கல்வியினை தொடர்வதற்கு பல்கலைக்கழகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில்
 கல்வி செயற்பாடுகள்
 ஆரம்பிக்கப்படும். எனவே மாணவர்கள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.