பிரான்ஸின் நைஸ் நகரில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோதவிட்டு 80 பேர் உயிரை பலியெடுத்த இளைஞன் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேசிய தினத்தையொட்டி பிரான்ஸின் நைஸ் நகரில் பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதை கண்டு களித்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென வெடிபொருட்களைக் கொண்ட டிரக் ஒன்று கண்மூடித்தனமான வேகத்தில் மோதிய காணொளி,இணைப்பு
இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இக்கொடூர தாக்குதலை நடத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது துனியாவைச் சேர்ந்த 31-வது இளைஞர் என தற்போது தெரியவந்துள்ளது. அவர் நைஸ் நகரில் தங்கி இருந்து இப்படுபாதக தாக்குதலை நடத்தியிருக்கிறார்
. புகைபடங்கள் ,இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக