ஞாயிறு, 29 நவம்பர், 2020

தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, கம்பஹா சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு 
மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்
அதன்படி, இந்த நிலைமை .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படும்.கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கடலோரம் மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் ராகம 
பகுதிகளும் .30-11-20.நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமையில் இருந்து விடுவிக்கப்படும்.மட்டக்குளி பொலிஸ் பகுதியில் உள்ள ராண்டிய உயன வீட்டுத் திட்டமும், பெர்குசன் வீதியின் தெற்குப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.வெல்லம்பிட்டி 
பொலிஸ் பகுதியில் உள்ள ரன்சந்த செவன வீட்டுத் திட்டம், சலாமுல்ல மற்றும் விஜயபுர கிராமசேவகர் பிரிவுகளை உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி
 தெரிவித்தார்.எவ்வாறாயினும், மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து அடுத்த புதன்கிழமை 
ஆராயப்படும் என்றும், அந்த பகுதிகள் விடுவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 27 நவம்பர், 2020

சுப்பர்மடத்தில் வீட்டு முற்றத்திலும் அஞ்சலிக்க தடை

பருத்தித்துறையில் அஞ்சலிக்க தடை; எல்லைமீறிய மனித உரிமை பறிப்பு
2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் மாவீரர்களாக உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தமது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று தடுத்துள்ளனர்.
இதனால் அவர்கள் வீட்டுக்குள் தமது பிள்ளைகள் மற்றும் மருமகனுக்கு படையல் படைத்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் பருத்தித்துறை – சுப்பர்மடத்தில்.27-11-20. இன்று மாலை 
இடம்பெற்றது.
அவர்களுடைய வீட்டுக்கு இன்று மாலை சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வீட்டின் முற்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைக் கழற்றுமாறு அறிவுறுத்தினர். அவற்றை வீட்டில் இருந்தவர்களைக் கொண்டு பொலிஸார் 
அகற்ற வைத்தனர்.
அத்துடன், வீட்டின் முன்பாக இராணுவத்தினர் கடமையில்
 ஈடுபட்டிருந்தனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஏறாவூரில் மாவீரர் நினைவேந்தலை ஊக்குவித்ததாக நால்வர் கைது

மாவீரர் நினைவேந்தலை ஊக்குவிக்கும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக நேற்று (26) மட்டக்களப்பு – ஏறாவூரில் நால்வர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாவீரர்களுக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி

இலங்கை நாடாளுமன்றில் 27-11-20. இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 27-11-20. இன்று
நாடாளுமன்றில் உரையாற்றும் போது மாவீரர்களுக்கு 
அஞ்சலி செலுத்தினார்.
“இந்த மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு இன்று நினைவு கூரப்படுகின்ற மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“காணி அபகரிப்பு இன்று பெரும் பிரச்சினையாகியுள்ளது. இதனால் தான் அன்று ஆயுதம் ஏந்தி போராடும் நிலை உருவானது. சரணலாயஙகள் அமைக்கவென கூறி காணிகள் அபகரிக்கப்பட்டுக் 
கொண்டிருக்கின்றன.
அதேவேளை, எமது பகுதியில் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளானர். வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களுக்கு காப்புறுதி முறை உருவாக்கப்பட வேண்டும். கெடுபிடிகள் நீக்கப்பட வேண்டும்” என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> /> 


யாழில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது

மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் 
அடிகளார் 27-11-20.இன்று  கைது.
யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் 27-11-20.இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் 
தெரிவித்தார்.
அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





முல்லையில் மாவீரர் நாளுக்கு தயாரானவரின் வீட்டை சுற்றிவளைத்த இராணுவம்

முல்லைத்தீவில் மாவீரர் ஒருவரின் சகோதரனின் வீட்டில்.27-11-20. இன்று  மாலை மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயாரான போது அவரது வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
சுற்றிவளைத்த இராணுவத்தினர் புகைப்படம் 
எடுத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு அச்சுறுத்தலையும் மீறி சகோதரனுக்கு மாவீரர் நாள் அஞ்சலியை குறித்த வீட்டார் தீபம் ஏற்றி 
செலுத்தினர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





இராணுவம் முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு மிரட்டல்

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில்.27-11-20 இன்று பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை திறக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் நிர்ப்பந்திப்பதாக வர்த்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக கணிசமான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்ற இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும் அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்திவருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





சிட்னியில் அதிரடியால் மிரட்டிய ஸ்மித் இந்தியாவிற்கு இலக்கு 375

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி ,27-11-20.இன்று தற்போது சிட்னியில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி பிஞ் – ஸ்மித் ஜோடியின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களை குவித்துள்ளது.
அணி சார்பில் அரோன் பிஞ் 124 பந்தில் 114, ஸ்டீவ் ஸ்மித் 66 பந்தில் 105, டேவிட் வோனர் 69, க்ளன் மக்ஸ்வெல் 45 ஓட்டங்களை பெற்றுக் 
கொண்டனர்.
பந்துவீச்சில் மொஹமட் சமி 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஏனையோர் சோபிக்கவில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


கண்டியின் கைநழுவியது வெற்றி; சுப்பர் ஓவரில் வென்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி
 கொண்டுள்ளது.
போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
அணி சார்பில் அதிகபட்சம் குசல் பெரேரா 52 பந்தில் 87, ரஹமனுல்லா குர்பஷ் 22 பந்தில் 53 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கைய்ஸ் அஹமட் 28 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றியிலக்கை நோக்கி ஆடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணி சார்பில் அதிகட்சம் தினேஷ் சந்திமால் 46 பந்தில் 80, இசுறு உதான 12 பந்தில் 34 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் நுவான் பிரதீப் 34 ஓட்டங்களுக்கு 2, நவீட்-உல் ஹக் 40 பந்தில் 2 விக்கெட்களை 
வீழ்த்தினர்.சுப்பர் ஓவர்
போட்டி சமநிலையானதை தொடர்ந்து சுப்பர் ஓவர் முறையில் முதலில் ஆடிய கொழும்பு 1 விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.
17 ஓட்டங்களை நோக்கி ஆடிய கண்டி 12 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 25 நவம்பர், 2020

மாத்தறை யில் கொரோனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்

உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை..கொரோனா வைத்தியசாலை தாதியர்கள்தமக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்து மாத்தறை மாவட்ட கொரோனா சிகிச்சை
 வைத்தியசாலையின் தாதியர்கள் 24-11-20.அன்று  
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கடமையை செய்ய உரிய வசதிகள் செய்து தரப்படவில்லையென 
தாதியர்கள் குற்றம்சாட்டினர்.
வைத்தியசாலையின் வெளிப்புறமாக பாதாதைகளை தாங்கியபடி தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமக்கு உரிய போக்குவரத்து, சுகாதாரம், உணவு, உறைவிடம் வசதி கிடைக்கவில்லை 
என்றும்,வைத்தியசாலையில் கடமைக்கு 
போதிய தாதியர்கள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.கிட்டத்தட்ட 200 கொரோனா நோயாளிகள் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழ் மற்றும் கோப்பாய்மாவீரர் நாளுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை.25-11-20. நாளை  வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் 
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை 
நடத்தவுதற்கு தடை கேட்டு எம்பிகள், சட்டத்தரணிகள் என் 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்நிலையில் இன்று இந்த வழக்கு
 விசாரணைக்கு வந்தபோது, மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் வழக்குத் தொடுனர் சார்பில் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி பிரபாகரன் குமாரரட்ணம்.24-11-20. இன்று பிற்பகல் மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் காலநிலை சீரின்மை காரணமாக மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி நாளை காலை மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதி ச.யாதவன்
 மன்றுக்கு அறிவித்தார்.
அதனால் வழக்கு நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


நம் உறவுகளை நினைவு கூருவதை எவரும் தடுக்க முடியாது?

இனத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் கிளிநொச்சி இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,
“இனத்துக்காக தங்களது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதை தடுக்க முடியுமா? 
எங்களது பிள்ளைகளை நினைவு கூருவதனை எவராலும் தடுக்க முடியாது. எங்களது வாழ்க்கைக்காக வீரகாவியமான எமது பிள்ளைகளை நினைவு கூருவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு 
வருகின்றது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதனை தடுக்கும் உரிமை எந்ததொரு நாட்டிலும் இல்லாத நிலையில், இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பது 
ஏற்புடையதல்ல. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக உலகறிய செய்வோம்” – என்றார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 23 நவம்பர், 2020

யாழில் மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீள பெற்றது பொலிஸ்

மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர்.
வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மாவீரர் நாளுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு பதில் நீதிபதியால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிரந்தர நீதிபதி விடுமுறையில் உள்ளமையால் வழக்கினை ஒத்திவைப்பதாக 
அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து மூன்று பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் குறித்த மனுக்களை மீளப் பெறுவதாக
 மன்றுக்கு அறிவித்தனர்.
இதனடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்கப்படவில்லை என்று மன்றின் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன்
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

மல்லாகம் மேல் நீதிமன்றின் தீர்ப்பு ஓர் வரலாற்று முடிவு அஜித்

யாழ் மல்லாகம் மேல் நீதிமன்றத்தின் .20-11-20.இன்றைய தீர்ப்பை “ஒரு வரலாற்று முடிவு என்றும், புலிகளை நினைவுகூரும் எந்த
 நிகழ்வுகளையும் தடுக்க பொலிஸார் நடவடிக்கை
 எடுப்பார்கள் எனவும்” பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக
 யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அஜித் ரோஹண வருகைதந்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழ் மல்லாகம் நீதிவான் மாவீரர் நாளுக்கு தடை விதிக்கமறுப்பு

 

மாவீரர் நாளுக்கு தடை விதிக்க மல்லாகம் நீதிவான் மறுப்பு; பொலிஸ் தரப்பின் மூக்குடைப்பட்டது பொலிஸாரின் மாவீரர் நாள் தடை கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான்.20-11-20. இன்று மாலை கட்டளை
 வழங்கினார்.
நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட 
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில்.19-11-20. நேற்றைய தினம்காங்கேசன்துறை பொலிஸார் மனுத் 
தாக்கல் செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினத்திற்கு திகதியிடப்பட்ட நிலையில் குறித்த மனு மீதான விசாரணை.20-11-20. இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் 
இடம்பெற்றது.
இதன்போது “பொலிஸாரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும், இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்படுள்ள தடை 
செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறினால் மீறுபவர்களை கைது செய்யமாறும்” நீதிவான் தனது கட்டளையில் குறிப்பிட்டார்.
அத்துடன் பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரதேச பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
மனுவில் குறிப்பிடப்பட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான எம்.ஏ.சுமந்திரன், வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இலங்கையின் சட்ட திட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.



வியாழன், 19 நவம்பர், 2020

ஓட்டுமட சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் ஓட்டுமட சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் விபத்து இருவர் காயம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் 19-11-20.இன்று மதியம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி 
விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளான வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியும் 
காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் 
முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2020

கனடாவில் காலமான மரியநேசனின் பூதவுடலை திருகோணமலைக்கு கொண்டுவர முயற்சி

கனடாவில் வாழ்ந்து வந்த பிக்பாஸ் புகழ் நடிகை லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் சுகவீனத்தால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் திருகோணமலைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், இந்தியாவில் தற்போது இருக்கும் லொஸ்லியா மற்றும் அவரது நண்பர்களும் இலங்கையின் திருகோணமலைக்கு வரமுயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் 
வெளியாகி இருந்தது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,
பிக்பாஸ் புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்று முன்தினம் தனது 52வது 
வயதில் காலமானார்.
மரியநேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அவரது உடலை, தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு 
வருகின்றன.
லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது.
அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் 
வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில், பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி, அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்த தகவல் தொடர்பாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
லொஸ்லியாவும் மரியநேசனும்
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டு லொஸ்லியாவின் குடும்பம்
 வாழ்ந்து வந்தது.
யுத்த சூழ்நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி லொஸ்லியாவின் குடும்பம் பின்னரான காலத்தில்
 இடம்பெயர்ந்தனர்.
மிகவும் வறுமை நிலைமைக்கு மத்தியில் வாழ்ந்த மரியநேசன், குடும்பத்தின் கஷ்ட சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன், 2009ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புக்களை தேடிஅவர் கனடா சென்றார்.
அப்போது லொஸ்லியா தனது இரண்டு 
சகோதரிகளுடனும், தாயின் அரவணைப்பிலும் இலங்கையிலேயே வாழ்ந்தார்.
லொஸ்லியாவின் தந்தை தனது உழைப்பில் குடும்பத்தை சிறந்ததொரு இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவரது உறவினர்கள்
 தெரிவித்தனர்.
இந்த நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பல வருடங்களின் பின்னர் தனது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அப்போதே அவருக்கு 
கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நிகழ்ச்சிக்குள் மரியநேசன் வருகை தந்து, லொஸ்லியாவை அவேசமாக திட்டிய காட்சி, ரசிகர்கள் மத்தியில் இன்றும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவமாக
 காணப்படுகிறது.
அந்த சம்பவமே, மரியநேசனை உலகறிய செய்தது.
அது தொடர்பான காட்சியில், என்ன சொல்லி வந்த நீ… நான் உன்னை அப்படியா வளர்த்தேன்… கதைக்கக்கூடாது.. என மரியநேசன், லொஸ்லியாவை பார்த்து கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த திரைப்பட இயக்குநர் சேரன், அவரை சமாதானப்படுத்த முயற்சித்த காட்சிகள் இன்றும் நினைவிலிருந்து நீங்காதுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த சில நிமிடங்கள் மாத்திரமே, லொஸ்லியா, தனது தந்தை மரியநேசனை பார்த்துள்ளதாக அவரது நண்பர்கள் 
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சென்னையில் தற்போது வாழ்ந்து வரும் லொஸ்லியா, இலங்கைக்கு வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
கொவிட் தொற்று இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் சூழலில், இலங்கைக்கு வருகை தருவதற்கான
 அனுமதியை கோரி லொஸ்லியா விண்ணப்பித்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர் என குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





Blogger இயக்குவது.