சனி, 7 நவம்பர், 2020

வியக்க வைக்கும் இலங்கை மாணவனின் வித்தியாசமான செயற்பாடு.

பார்ப்போரை வியக்க வைக்கும் இலங்கை மாணவனின் வித்தியாசமான செயற்பாடு..!! இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாணவனாமாதா, பிதா, குரு, தெய்வம் என பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் இவர்களை தெய்வாமாக போற்றுகிறார்கள் என்பது
 கேள்விக்குரிய விடயமே.
உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் தனக்கு 13 வருடங்கள் கல்வி கற்பித்த கல்லூரியை பயபக்தியுடன் தலை வணங்கி விடைபெறும் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதிக் கல்லூரி மாணவன் 
ஒருவர் குறித்த பதிவு இது.
இந்தக் காலத்தில் தமது பெற்றோர்களையே உதறித் தள்ளி விட்டுச் செல்லும் பிள்ளைகளின் மத்தியில் இலங்கையில் இப்படியும் ஒரு மாணவன் இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கின்றது. பொதுவாக
 சிங்கள சகோதரர்கள் தமது தாய் தந்தையர்களை வீழ்ந்து வணங்கும் வழக்கம் இருந்தது. இக்காலத்தில் அதுவும் குறைவடைந்து விட்டது.
ஆனால், தமக்கு கல்வியறிவு 
புகட்டிய பாடசாலையை
 கோயிலாக நினைத்து வணங்கும் மாணவர்கள் மிகச் சிலரே.உஜாலா நீலத்தைக் கரைத்து கல்லூரி அன்னையை அலங்கோலப்படுத்திவிட்டு செல்பவர்கள் உள்ள நாட்டில் இந்த மாணவனைப் போன்ற முன்மாதிரிகளை எமது மாணவர்களும் 
பின்பற்ற வேண்டும்
அப்போது தான், ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாகும்.இனியாவது, இந்த மாணவனைப் பார்த்து நமது இளைய சமுதாயம் மாற்றம் பெற வேண்டும். நடக்கும் என நம்புவோம்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.