செவ்வாய், 17 நவம்பர், 2020

கடும் துன்பத்தை 2021இல் சந்திக்கப் போகும் உலகம்

உலக உணவுக் கழகத்தின் தலைவர் எச்சரிக்கை
  இந்த உலகம் 2020ம் ஆண்டைவிடவும் 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி எச்சரித்துள்ளார்.அமெரிக்க, ஐரோப்பா, பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலைத் தாக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், உலக உணவுக் கழகத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த நோபல் பரிசு கிடைத்தமையானது உலக நாடுகளை எச்சரிப்பதற்கு ஒரு வாய்பை 
தந்துள்ளதாக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி குறிப்பிட்டுள்ளார்.2021ம் ஆண்டில் மிகப்பெரிய 
அளவில் உலகில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட வேண்டிய
 சூழ்நிலை உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் சுமார் 20 நாடுகள் அதிக கடுமையான 
உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்றும் உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி
 எச்சரித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.