இலங்கைச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 செப்டம்பர், 2026

நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியோரின் உடைமையில் ஐஸ் போதைப்பொருள்

இலங்கை கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும்,
 அதன் பின்னால் இருந்து பயணித்தவரும் காயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
காயமடைந்தவர்களின் பயணப் பைகளை பரிசோதித்த போது அதிலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் 
மீட்டுள்ளனர். 
இதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
கைதானவர்கள் 21 மற்றும் 25 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
கொட்டதெனியாவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஸ்ரீலங்கன் விமான சேவை .ஜகார்த்தாவுக்கான விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளது

தற்போது கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே.07-09-2026. இன்று இயக்கப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது. 
இந்தோனேசியாவின் 'அனக் கிரக்கடாவ்' (Mount Anak Krakatau) எரிமலை சீற்றமடைந்ததால், அதிலிருந்து சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் வானில் கலந்ததால் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும்.
கொழும்பில் இருந்து ஜகார்த்தா செல்லவிருந்த UL 364 விமானமும், ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வரவிருந்த UL 365 விமானமும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்
 அறிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிமலை சாம்பல் மற்றும் சிலிக்கா கொண்ட பாறைத் துண்டுகள் வளிமண்டலத்தில் கலப்பதால் விமான
 இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடும் ஆபத்து ஏற்படக்கூடும் 
என்பதால், இந்தோனேசிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹத்தா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை நோக்கிய மேற்கு வான் வழித்தடம் வழியாக மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக நேற்று இரவு மாற்று வான் வழிகளுக்குத் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 5 செப்டம்பர், 2026

நாட்டில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,
 .05-092026.இன்று  நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ரூ.5 குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்புஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கைக்கே கச்சத்தீவு :உரித்தானது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கே   கச்சத்தீவு உரித்தானது  என  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் 
சுட்டிக்காட்டினார். 
 கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.
சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு 
உட்பட்டதாகும்.
தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை 
மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் மின் வெட்டு தொடர்பில் உலா வரும் செய்தி எரிசக்தி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி

நாட்டில் சிலவேளை ஏதேனும் தடங்கள் ஏற்பட்டாலே தவிர தடையற்ற மின்விநியோகத்தை மேற்கொள்ள எந்த சிக்கலும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க
 உறுதியளித்துள்ளார்.
நொரோச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார். 
நிலக்கரிப் பற்றாக்குறையால் மின்வெட்டு விதிக்கப்படலாம் என பரவிவரும் பொய்யான செய்திகளை விமர்சித்த அவர்,  2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் கூறினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

நாட்டில் திருகோணமலை கன்னியா வெந்நீருற்றிற்கும் காலக்கெடு

 நாட்டில் திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, தற்போதுள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு 
பிறப்பித்துள்ளது.
அத்துடன், மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, தொல்லியல் திணைக்களம் குறித்த கன்னியா பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் என்ன வகையான நிர்மாணத்தை மேற்கொள்கின்றது என்பது குறித்த எழுத்து மூல அறிக்கையைத் தமது தரப்பில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜீவன் மன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
அதன்படி, இவ்வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்காளி தரப்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி 
சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் “தொல்பொருள் என அடையாளம் காணப்பட்ட விடயத்தைப் பாதுகாப்பதற்குத் தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்து உண்டு. அதன்படி, இங்கு இருப்பதாகச் சொல்லப்படும் பண்டைய தூபியை அது தற்போது உள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு 
உரித்து உண்டு 
அந்த இணக்கப்பாட்டின் படியே அங்கே இருந்த பிள்ளையார் கோயில் இன்னுமொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அரசாங்கத்தின் இணக்கத்தோடு அதற்கான இட ஒதுக்கீடும்
 செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்குத் தொல்லியல் திணைக்களம் நடவடிக்கைகள் எடுத்ததை அறிந்து, நீதிமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு மாறாகத் தொல்லியல் திணைக்களம் நடந்து கொள்கின்றது என்று, குறித்த காணியின் உரிமையாளர் சார்பில் சட்டத்தரணி திருமதி. பிரசாந்தி உதயகுமார் நகர்த்தல் பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
 கொண்டு வந்தார்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆவது பிரிவில், காணி உரிமையாளருக்கும் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையிலே குறித்த காணியில் அடையாளம் காணப்படும் தொல்லியல் விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அந்தத் தொல்லியல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தமாக 
அது அமையும்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் சொல்லப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்திலே, மிகவும் விசேடமாக ‘பாதுகாப்பு மட்டும்’ என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, அங்கு வேறு ஏதும் செய்யவோ, குறிப்பாகப் புனரமைப்பு செய்யவோ முடியாது; உள்ளவற்றைப் பாதுகாக்க மட்டுமே முடியும்.
வேறு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வேறு அதிகாரங்களை இங்கு அவர்கள் பாவிக்க முடியாது; ஏனெனில், பாதுகாப்பது தவிர அந்த இடத்தில் வேறு எந்தச் செயலையையும் செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் அவர்கள் எங்களோடு இணங்கியிருக்கிறார்கள். இதனடிப்படையிலேயே நாம் இந்த விடயத்தைக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்” என சுமந்திரன்; தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

நாட்டில் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி சவுண்ட் விட கட்டுப்பாடு

இலங்கையில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது 
தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி 
அளிக்கப்பட மாட்டாது.
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது 
என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதியினர்,

இலங்கை  மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 24 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று விகித பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டாலர் 333.51 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 456.48 ரூபா
யூரோ 391.62 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.19 ரூபா
சுவிஸ் பிராங் 419.52 ரூபா
கனடிய டாலர் 243.60 ரூபா
கத்தார் ரியால் 92.20 ரூபா
குவைத் தினார் 1082.70 ரூபா
சவுதி ரியால் 90.15 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

நாட்டில் மொனராகலையில் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர் கைது

நாட்டில்  மொனராகலையில் உள்ள மௌ ஆரா நீர்த்தேக்கத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது கஞ்சா கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனையின் போது 1,044 கிலோகிராம் மற்றும் 180 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பிடப்பட்ட தெரு மதிப்பு சுமார் ரூ. 73.78 மில்லியன் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அதே பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த கஞ்சா சாகுபடிப் பகுதியிலும் போலீசார் சோதனை நடத்தி, 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றொரு சந்தேக நபரையும் கைது செய்தனர்.
வலானா மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் இயக்குநரின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழும், அப்பிரிவின் பொறுப்பு அதிகாரியின் மேற்பார்வையிலும் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




சனி, 22 ஆகஸ்ட், 2026

நாட்டில் வறட்சி தீவிரம்: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்தல்

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைவதன் காரணமாக நீர் நாளைமுதல்  மறு அறிவித்தல் வரை தினமும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்- தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிவமைப்புச் சபை, மட்டக்களப்பு பிராந்தியம்".செய்தி அன்புக்குரிய மக்களே இந்த செய்தி சாதாரண செய்தியல்ல.
எதிர்வுகூறப்பட்ட எல்நினோ தீவிரமடைந்து வருவதாலும் மற்றும் எங்கள் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள சமுத்திரப் பகுதிகளிலும் நிலவும் வெப்பமான வானிலைத் தோற்றப்பாடுகளின் விளைவுகளின் ஆரம்பம்.
கடந்த 90 நாட்களில் (மே மாதம் 20ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20ம் திகதி வரை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாகவே 24 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.
ஆனால் 493 மி.மீ. நீர் ஆவியாகி உள்ளது. மிக அண்மித்த நாட்களில் சற்றுக் கனமான வெப்பச்சலன மழைக்கும் வாய்ப்பில்லை.
( ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவிலான மழைக்கு வாய்ப்புண்டு). எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதியை அண்மித்தே இரண்டாவது இடைப்பருவ மழை தொடங்கும் வாய்ப்புள்ளது. 
அதுவும் இரண்டாம் இடைப்பருவ மற்றும் வடகீழ்ப் பருவ மழை எவ்வாறு அமையும் என்பதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரமே உறுதிப்படுத்த முடியும். தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சற்று அதிக அளவில் வெப்பநிலை 
நிலவுகின்றது. 
ஆனால் வரண்ட தென்மேற்கு பருவக்காற்று வீசுவதனால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் அதிக வெப்பநிலையும் வேகமான காற்று வீசுகையும் அதிக 
ஆவியாக்கத்தினைத் தூண்டும். 
குறிப்பாக வேகமான காற்று வீசுகை அதிக ஆவியாக்கத்திற்கு காரணமாகும்( டால்ரன் விதி- Dalton's Law of Evaporation). இதனால் எமக்கு தெரியாமலே எங்கள் பிரதேசங்களில் அதிக நீரிழப்பு நிகழ்கின்றது. அதே வேளை இக்காலத்திலேயே நாம் அதிக நீரைப் பயன்படுத்துகின்றோம்.
பெருமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் காலம் வரை ( கிட்டத்தட்ட எதிர்வரும் ஒக்டோபர் 12... அதாவது இன்னமும் ஏறக்குறைய 52 நாட்களுக்கு) எங்களிடம் தற்போது உள்ள நீரையே நாம் பயன்படுத்த
 வேண்டும். ஆகவே நீரை வினைத்திறனாக பயன்படுத்தி நாம் நீர் நெருக்கடியைத் தவிர்ப்போம். 
கடந்த காலங்களில் உலகின் சில முக்கியமான நகரங்கள்( பெங்களூரு மற்றும் ஜோகன்னஸ்பேர்க்) இவ்வாறு தொடர்ச்சியான மழையற்ற தன்மை, அதிக ஆவியாக்கம், நீர்ச்சேமிப்பைக் கருத்தில் கொள்ளாத பயன்பாடு காரணமாக நீரற்ற நாட்களைக்( Zero Water Day) கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாம் அத்தகைய நிலைமைக்கு செல்வதற்கு முன்னரே 
விழித்திடுவோம். 
 1. அன்புக்குரிய வர்த்தகர்களே!!! பெருமழை ஒன்று கிடைக்கும் வரை தயவு செய்து உங்கள் வணிக நிலையங்களை குளிர்மைப்படுத்த அதிகளவிலான நீரை உங்கள் வணிக நிலையங்களுக்கு முன்னே ஊற்றி வீண் விரயம் செய்யாதீர்கள்...
 2. கட்டுமானதாரர்களே!!! நீரை அதிகளவு நுகரும் கட்டுமான வேலைகளை பெருமழை ஒன்று கிடைக்கும் வரை நிறுத்தி அல்லது மட்டுப்படுத்தி
 நீரை சேமியுங்கள் 
 3. பெருமழை ஒன்று கிடைக்கும் வரை உங்கள் வீட்டுக் கிணறுகளை இறைத்து சுத்தப்படுத்தும் வேலைகளை ஒத்திப்போடுங்கள். 
 4. விவசாயிகளே!!! நீர் அதிகளவில் ஆவியாகக்கூடிய நேரங்களில் உங்கள் கிணற்று நீரை இறைத்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சாதீர்கள்.
 5. பக்தர்களே!!! உங்கள் ஆலயங்களின் கேணிகளின் நீர் ஏற்கெனவே குறைந்த மட்டத்திலேயே உள்ளமையால் தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு ஆலயக் கேணிகளைத் துப்புரவாக்கும் போது நீரை இறைத்து வெளியேற்றாமல் தூர்வாருங்கள். ஆலயக் கேணியில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களை அகற்றுங்கள். 
ஏனெனில் பல இடங்களில் ஆலயக் கேணிகளே அவற்றின் கட்டமைப்புக் காரணமாக தரைக்கீழ் நீரைச் சேமிக்கும் பிரதான மூலங்களாக தொழிற்படுகின்றன.
எனவே அன்புக்குரிய மக்களே....வானிலை வரட்சியொன்றில் நாம் உள்ளோம்.... எங்கள் நீர்வளம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்... நீரை மிகவும் வினைத்திறனாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துங்கள்....என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று  இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இன்று இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 334.12 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 457.00 ரூபா
யூரோ 392.33 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.49 ரூபா
சுவிஸ் பிராங் 421.73 ரூபா
கனடிய டாலர் 243.74 ரூபா
கத்தார் ரியால் 92.37 ரூபா
குவைத் தினார் 1084.67 ரூபா
சவுதி ரியால் 90.31 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 20 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

நாட்டில் இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு 
பணிகள்-20-08-2026- இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் இணுவிலில் மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து 
அகற்றக் கோரி-20-08-2026,.இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து
 அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை
 விடுத்தனர்.
அத்துடன் மதுபான சாலையை அகற்றுமாறு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 19 ஆகஸ்ட், 2026

நாட்டில் வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட வர்கள் கைது

நாட்டில்  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு 
லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
பரந்தன் வீதிச் சோதனைச்சாவடியில் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
அவர்களின் ஐந்து டிப்பர் வாகனங்களும் பொலிசாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 17 ஆகஸ்ட், 2026

நாட்டில் நகை திருட்டு வழக்கில் தேடப்படும் கொம்பனித் தெருவில் உள்ள கோவில் பூசாரி

முருகன் கோவிலின் சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஸ்லேவ் ஐலண்ட் முருகன் கோவிலின் தலைமை அர்ச்சகருக்கு 
கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
சதீஸ்வரன் குருக்கள் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த அர்ச்சகர் கோயிலின் நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு கோட்டஹேனாவில் உள்ள நியூ செட்டி தெருவில் ஒரு சொத்தை வாங்கியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
காணாமல் போன கோயில் மதிப்புமிக்க பொருட்களைக் கண்டறியவும், கூறப்படும் பணத்தில் வாங்கப்பட்ட சொத்தை ஆய்வு செய்யவும் விசாரணைகள் தொடர்கின்றன. சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில்  நாணய மாற்று பெறுமதி


 

சனி, 15 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

இலங்கையில் இன்று  வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 337.15 ரூபா
ஜப்பானிய யென் 2.14 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 456.84 ரூபா
யூரோ 390.72 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 240.84 ரூபா
சுவிஸ் பிராங் 416.67 ரூபா
கனடிய டாலர் 243.65 ரூபா
கத்தார் ரியால் 93.23 ரூபா
குவைத் தினார் 1092.75 ரூபா
சவுதி ரியால் 91.15 ரூபா
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

நாட்டில் பொலிஸ் சீருடை மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கணிப்பை எதிர்பார்க்கும் அரசு

லங்கை காவல் துறையினரின் (Police) பாரம்பரிய காக்கி நிற சீருடையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் பாதுகாப்புத் துறையில் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
தற்போதைய வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்பவும், சர்வதேச தரத்திற்கு இணையாகவும் இந்த மாற்றங்களைச் செய்ய
 திட்டமிடப்பட்டுள்ளது.
சீருடை மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்,பழமையான நடைமுறை,தற்போதைய காக்கி சீருடை முறை பிரித்தானியர் ஆட்சிக்கால மரபுகளைத் தொடர்ந்து 1974ம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். இது தற்கால நவீன தேவைகளுக்குப் பொருந்தவில்லை 
எனக் கருதப்படுகிறது.
இலங்கையின் அதிக வெப்பம் மற்றும் வியர்வை தரக்கூடிய காலநிலைக்கு தற்போதைய தடிமனான காக்கி ஆடைகள் காவலர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் காவல்துறைக்கு நீலம் அல்லது பிற நவீன நிறங்கள் பயன்படுத்தப்படுவதால், இலங்கை காவல் துறையையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது இதன் நோக்கமாகும்.
காக்கி நிறத்திற்குப் பதிலாக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் கடும் நீல நிறம் (Dark Blue) அல்லது சாம்பல் நிறம் கலந்த ஆடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பொதுமக்களிடமும், அதிகாரிகள் மட்டத்திலும் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆலோசனைகள் 
நடத்தப்படுகின்றன.
வெப்பத்தைத் தாங்கக்கூடிய, காற்றோட்டமான, வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய பாலியஸ்டர் கலப்பு (Polyester blends) அல்லது நைலான் போன்ற நவீன துணி வகைகளைப் பயன்படுத்த 
ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தடிமனான தோல் வார்ப்பட்டைகளுக்கு (Leather belts) பதிலாக இலேசான தந்திரோபாய பெல்ட்கள் (Tactical belts) மற்றும் நீண்ட நேரம் அணிந்திருக்கக்கூடிய சௌகரியமான காலணிகள் (Tactical boots) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி உதவிகள்சீருடை மாற்ற ஆலோசனைகள் ஒருபுறமிருக்க, தற்போதைய இலங்கை காவல் துறையினரின் (Sri Lanka Police) நலனைக் கருதி, சீருடைகள் மற்றும் காலணிகளை கொள்வனவு செய்வதற்காக 7,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வீதிப் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்தும் போது, பொலிஸ் அதிகாரிகள் மறைவான இடங்களில் ஒளிந்திருந்து சாரதிகளைப் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விபத்துகளைத் தடுப்பது மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும், போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் இடங்களில் கடமையில் ஈடுபடுவதன் மூலம், 
விதிமீறல்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

Blogger இயக்குவது.