நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு
லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பரந்தன் வீதிச் சோதனைச்சாவடியில் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் ஐந்து டிப்பர் வாகனங்களும் பொலிசாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக