வியாழன், 30 ஏப்ரல், 2026

அவுஸ்திரேலியவில் சுகமில்லாத மகனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தாய்

தாய் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி, பொதுமக்களிடம் நிதி வசூலித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அவுஸ்திரேலியத் தாய்க்கு அந்த நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை 
விதித்துள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயதுடைய இந்தப் பெண், தனது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுள்ளார்.
இதனை நம்பிய பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறுவனின் மருத்துவச் செலவுக்காகப் பெருமளவு நிதியை 
வழங்கியுள்ளனர்.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தத் தாய் செய்த செயல்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுவன் புற்றுநோயாளி என்று நம்புவதற்காக அவனது தலைமுடி மற்றும் புருவங்களைச் சிரைத்துள்ளார்.
உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டுகளைப் போட்டு, அவனை எப்போதும் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர வைத்து 
நாடகமாடியுள்ளார்.
வசூலித்த பணத்தை மகனின் மருத்துவத்திற்குப் பயன்படுத்தாமல், தனது ஆடம்பரத் தேவைகளுக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் செலவிட்டுள்ளார். சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும், அவனுக்குப் புற்றுநோய் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், பணத்திற்காகத் தாய் திட்டமிட்டு இந்த நாடகத்தை ஆடியது 
அம்பலமானது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, "ஒரு தாய் தனது சொந்தப் பிள்ளைக்கே இழைத்த இந்தக் கொடுமை மன்னிக்க முடியாதது"
 என்று சாடினார்.
பணத்திற்காகப் பிள்ளையின் ஆரோக்கியத்தையும் அடையாளத்தையும் சிதைத்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு: வடக்கிற்கான சேவைகளில் புதிய திருத்தங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று, வவுனியா - புளியங்குளம் பகுதியில் இயந்திர சிக்கலுக்கு 
உள்ளாகியுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அசங்க சமரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தொடருந்தின் இயந்திர சிக்கலைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 29 ஏப்ரல், 2026

தற்போது மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்கள்

தற்போது ஈரான் மீதான போர் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக
 பனாமா கால்வாய் அதிகார சபையின் நிதித் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
"மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை சீராகும் வரை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று விக்டர் வியல் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி
 வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் கடற்கரையோரம் உள்ள நீர்வழியினைத் தவிர்ப்பதற்காக வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்ட அல்லது வேறு நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் இப்போது பனாமா கால்வாய் வழியாகப்
 பயணிக்கின்றன.
இந்தக் கால்வாயைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ஒரு கப்பலுக்கு 300,000 டொலர் முதல் 400,000 டொலர் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் கால்வாயைக் கடப்பதற்கான அனுமதியை உறுதி செய்ய சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை கட்டணம் செலுத்துவதாக அசோசியேட்டட் பிரஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.                                                      என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சில நிறுவனங்கள் விமானங்கள் கட்டுப்படியாகாத இயக்கச் செலவுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது

 தற்போது ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை "
தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும், சில நிறுவனங்கள்
 "செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில்" இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மே 1 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னதாக, அவசர விலை நிவாரணத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் இக்கூட்டமைப்பு கோரிக்கை
 விடுத்துள்ளது.
மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் இலாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 11-18 டொலரிலிருந்து தற்போது 130 டொலருக்கும் அதிகமாக 
உயர்ந்துள்ளது.
இது மசகு எண்ணெய் விலையை விட (பீப்பாய் ஒன்றுக்கு 72 டொலரிலிருந்து 118 டொலராக உயர்வு) மிக வேகமாக எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. கொவிட்-19 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற "கிரெக் பேண்ட்" விலை நிர்ணய முறையை 
அறிமுகப்படுத்துமாறு 
இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. 
இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நியாயமான இலாபத்தைப் பெறுவதுடன், வானூர்தி நிறுவனங்களின் சுமையைக் குறைக்க முடியும். ஏப்ரல் 1 அன்று உள்நாட்டு வானூர்தி எரிபொருள் 
விலையை 25 வீதம் மட்டுமே உயர்த்திய அரசாங்கம், சர்வதேச வானூர்திகளுக்கான எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 100 வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் சர்வதேச சேவைகளை நடத்துவது சாத்தியமற்றதாகிவிட்டதோடு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வானூர்தி எரிபொருளுக்கு தற்போது 11 வீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதுடன், மாநில அளவிலான மதிப்பு கூட்டு வரி மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 29 வீதம் மற்றும் டெல்லியில் 25 வீத வரி 
வசூலிக்கப்படுகிறது.
மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய மையங்களிலும் 16 வீதம் முதல் 20 வீத வரை வரி காணப்படுகிறது. இந்தியாவின் 95 சதவீத விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனங்கள், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் போன்றவற்றால்
 ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க கலால் வரி மற்றும் வற் வரி குறைப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கனேடிய பிரதமர் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை நீக்குவதாக அறிவிப்பு

கனடா  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர் மார்க் கார்னி
 அறிவித்துள்ளார்.
இந்த வரி நீக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 7ம் திகதி வரை அமலில் இருக்கும். இதன் மூலம் பெட்ரோல் லீட்டருக்கு 10 காசுகள், டீசல் லீட்டருக்கு 4 காசுகள் குறையும், விமான எரிபொருள் லீட்டருக்கு 4 காசுகள் வரி நீக்கப்படும்.
இந்த தற்காலிக வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, "ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது கனடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த 'வரி விடுமுறை' ஒரு பாலமாக அமையும்," என்று ஒட்டாவாவில் 
தெரிவித்தார்.
தற்போது கனடாவில் ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 1.76 டொலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 1.26 டொலராக இருந்தது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

யாழ் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பேருந்துகளில் பயணிகள் சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தொலைபேசி பேச தடை

.புதிய சட்டத்திட்டங்கள் சுவிற்சர்லாந்திலே  2026ம் ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்டது. அது கட்டடச் சட்டங்கள், பயணச் சட்டங்கள் என்ற பல 
வகையாக உள்ளது. 
இந்நிலையில், ஸுக் மாநிலத்தில் பேருந்துகளில் நாங்கள் பயணிக்கும் போது எந்த உணவுகளையும் அதற்குள்ளே வைத்துச் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. 
அதே வழியில் தற்போது லவுசான்மாநிலத்தில் பேரூந்துகளில் இருந்து தொலைப்பேசி பேசுவது தடை 
செய்யப்பட்டிருக்கிறது. 
தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் மேற்குறிபிடிப்பட்ட சட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

இலங்கையில் தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொடருந்து பயணங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
"சாகரிகா தொடருந்து தடம் புரண்ட சம்பவத்திற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்தாலும், நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட தவறு அல்ல" 
எனத் தெரிவித்தார்.
தொடருந்தில் 80 சதவீதமானவற்றில் வேகத்தை அளவிடும் கருவிகள் சரியாக இயங்குவதில்லை எனவும், தொடருந்து தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர்
 குற்றம் சாட்டினார்.
"இதுவரை காலமும் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பைப் பணயம் வைத்தே தொடருந்தை சரியான நேரத்திற்கு இயக்கினர். ஆனால் இனி அந்த அவதானத்தை எடுக்கப் போவதில்லை.
வேகக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதால் தொடருந்து தாமதமாகவே இயங்கும்" எனத் தெரிவித்தார். குறைபாடுகள் உள்ள தொடருந்துகளைத் திருத்திக் கொடுக்குமாறு கோரிக்கை
 விடுத்துள்ள அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த தொடருந்துகளை இயக்குவதில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பணி நேரம் மற்றும் சலுகைகளில் மாற்றம்

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைக்கவும், தேசிய எரிசக்தி இருப்பை முறையாக முகாமைத்துவம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான பொதுச் சேவைகள் பராமரிப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு இணைந்து இதற்கான இடைக்கால வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பங்கள் (Scanned Signatures), டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு முதன்மையாக "meet.gov.lk" தளத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 02/2026 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி 
வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களை
 மேம்படுத்துமாறும்,
 தரவுப் பாதுகாப்பு (Data Protection) தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

இன்றைய தினம் சர்வதேச சந்தையில்தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.04 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் நாற்பத்தி ஒன்பதாம் ஆம் ஆண்டு நினைவேந்தல்

 தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.26-04-2026. இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு
 நடைபெற்றது 
முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை  செலுத்தியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் தேரர்கள் கைது

நாட்டில் சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர்
 தெரிவித்தார். 
சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு இடையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் தலா 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டதாகத் 
தெரிவிக்கப்படுகிறது. 
இவர்கள் ஒருவரின் அனுசரணையில் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அங்கு அவர்கள் சாதாரண
 உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த
 புகைப்படங்கள் மற்றும்
 காணொளிகள் அவர்களின் கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. 
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவென்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது 
சந்தர்ப்பம் இதுவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயர் கல்வி கற்கும் இளம் தேரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் புதுக்குடியிருப்பில் மூன்று கடைகள் மூடி முத்திரை; பதின் ஒரு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

நாட்டில் .புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக
 சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், உணவகங்கள், வெதுப்பகங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், மருத்துவச் சான்றிதழ் இன்றி பணியாற்றல், தனிப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த தவறுதல், கழிவு நீரை 
சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி விற்பனை நிலையம் நடத்தல், சுவர் மற்றும் தரையை அசுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்
 கண்டறியப்பட்டன.
இதனையடுத்து வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஸ்ரன் ஜோய், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரால் நேற்றையதினம் (24.04.2026) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்து மொத்தமாக 235,000 ரூபா அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 
வழங்கியது.
மேலும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலையம் மற்றும் இரண்டு ஜூஸ் கடைகள் என மொத்தம் 3 விற்பனை நிலையங்களுக்கு பூட்டு மற்றும் சீல் வைக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



lநாட்டில் .வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி

தற்போது  வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது 
உங்கள் நண்பரின்
 பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய ".apk" (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் 
சென்றுவிடும்.
.இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிய வந்து, வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, உங்களுக்கு வரும் செய்திகளைத் திறக்கும்போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு WhatsApp மற்றும் Telegram சமூக ஊடகங்கள் ஊடாக ".apk" (.apk) கோப்புகள் (Files) அனுப்பப்படுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
apk கோப்பு என்பது 'Android Package Kit' ஆகும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை (Apps) நிறுவுவதற்கான
 ஒரு 'Setup File' ஆகும்
சமூக ஊடகங்கள் ஊடாக உங்களுக்கு வரும் திருமண அழைப்பிதழ், மின்சாரக் கட்டணம் அல்லது அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற பெயர்களில் அனுப்பப்படும் இந்த apk கோப்புகளை, ஒரு படம் அல்லது PDF எனக் கருதி கிளிக் செய்தவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு செயலியாக (App) தானாகவே
 நிறுவப்படும் (Install).
இதன் பின்னர், ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் போனில் உள்ளவற்றைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதன் மூலம் உங்களுக்கு வரும் SMS செய்திகளை அவர்களால் வாசிக்க முடியும் என்பதுடன், உங்கள் வங்கி கணக்குகள் தொடர்பான இரகசிய OTP குறியீடுகளும் நீங்கள் அறியாமலேயே ஹேக்கர்களின் 
கைக்குச் சென்றுவிடும்.
இதன் காரணமாக, அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது நண்பரின் பெயரிலிருந்தோ வரும் இவ்வாறான சந்தேகத்திற்குரிய ".apk" கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் போனுக்குத் தேவையான 
செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் Google Play Store அல்லது Apple App Store ஆகியவற்றைப் மட்டுமே 
பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், மொபைல் போன் செட்டிங்ஸில் (Settings) உள்ள "Install Unknown Apps" என்ற தெரிவை முடக்கி (Disable) வைப்பதும்
 அவசியமாகும்.
ஒருவேளை நீங்கள் இவ்வாறான மோசடியில் சிக்கினால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டு அருகிலுள்ள
 பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஏப்ரல், 2026

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு

நாட்டில்  கிளிநொச்சி பொலிசாரின் அதிரடி நடவடிக்கை இந்த மாத காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணலுடன் பிடிபட்ட 24டிப்பர் வாகனங்கள் மற்றும் 10உழவியந்திரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் பொலிசாரின் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பின் மூலம் இந்த மாதத்தில் இன்று வரை பிடிபட்ட குறித்த டிப்பர் மற்றும் உழவியதிரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டன..
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் சரக்கை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டனர்.
BIA வருகை முனையத்தின் 'பசுமை வழி' வழியாக, ரூ. 4.26 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் சரக்குடன் வெளியேற முயன்றபோது சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள 35 மற்றும் 53 வயதுடைய இரண்டு வங்கதேச நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீன நாட்டவர் ஒருவர் சீனாவில் சிகரெட் சரக்கை வாங்கி, கம்போடியா வழியாக மலேசியாவின் கோலாலம்பூருக்குக் கொண்டு சென்றதாக ஆரம்பகட்ட சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் கொண்டு சென்ற ஐந்து சூட்கேஸ்களில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,400 சிகரெட்டுகள் அடங்கிய மொத்தம் 142 அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவில் நிர்வாகச் சிக்கல்: நோயாளர்கள் பாதிப்பு

நாட்டில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக வந்த கர்ப்பிணி பெண்ணை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று (22.04.2026) இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட குறித்த தாய், நீண்ட நேரம் அனுமதிக்கப்படாமல் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
பின்னர் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் தலையீட்டின் பின்னரே அவர் வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்தத் தாய் முன்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிகளில் மாதாந்திர கிளினிக் சிகிச்சை பெற்றிருந்ததாகவும், வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்றவர்களை இங்கு 
உடனடியாக அனுமதிக்க முடியாது என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாலேயே இத்தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்று முன்னரும், மகப்பேற்றிற்காக வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சில தாய்மார்கள், பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக
 குறிப்பிடப்படுகிறது.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வட மாகாணத்திற்கான பெண் நோயியல் பிரிவு கட்டப்பட்டிருந்தாலும், அதற்கான சேவைகள் இன்னும் முழுமையாக 
தொடங்கப்படவில்லை. 
இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

நாட்டில்  கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது நாளை 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அமுலில் இருக்கும். கடுகண்ணாவ
 முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கே இந்த உத்தரவு பொருந்தும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று ( 22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம்
 எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சபரகமுவ மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த நாட்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

யாழ் நெடுந்தீவில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்


. யாழ் நெடுந்தீவிற்கு ஆளுநர் மற்றும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று திரும்பியுள்ள நிலையில்.24-04-2026- நாளை வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது அமைப்புக்கள் 
அறிவித்துள்ளன.
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து   ஆரம்பமாகும் போராட்டப்   பேரணியானது நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு முடிவுறவுள்ளது
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தீவின் முக்கியமான தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளன.
நெடுந்தீவிற்கான தனியார் கடற்போக்குவரத்துச் சேவைகள் நாளை முழுமையாக இடம்பெறாது. உள்ளூர் தரைவழிப் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்படும்.   சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனச் சேவைகளும் நாளை நிறுத்தப்படும்.அதன் காரணமாக, நாளை நெடுந்தீவுக்கான 
மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இயங்காது எனப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளனர்.
நெருக்கடி காலங்களில் ஈபிடிபி ஆதரவு பெற்ற பிரதேசமாக நெடுந்தீவு அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் வசம் உள்ளுராட்சி அதிகாரமுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாற்பத்தி நான்கு மில்லியன் மதிப்பிலான வீட்டு மோசடி இங்கிலாந்தில் நான்கு பேர் கைது

இங்கிலாந்தின் தீவிர மோசடி அலுவலகம்(SFO), எரிசக்தி நிறுவனங்களுக்கு £44 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய வீட்டு வெப்பக் காப்பு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. 
மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில், இங்கிலாந்து முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைகளில் பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக SFO மற்றும் தேசிய குற்றவியல் முகமை தெரிவித்தன. 
இந்த விசாரணை, ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை வெப்பமாக வைத்திருக்கவும், பணத்தைச் சேமிக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும் வெப்பக் காப்பு மற்றும் வெப்பமூட்டும் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட ஆதரவுத் திட்டம் தொடர்பானது. 
எரிசக்தி நிறுவனக் கடமை 4 (ECO4) என அறியப்படும் இந்தத் திட்டத்திற்கு எரிசக்தி நிறுவனங்களே பணம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது.
இந்தத் திட்டம் டிசம்பரில் முடிவுக்கு வரும், அதற்குப் பதிலாக 'வெப்பமான வீடுகள் திட்டம்' (warm homes plan) கொண்டுவரப்படும், இது சூரிய மின் தகடுகள் மற்றும் வெப்பப் பம்புகளுக்கும் நிதியளிக்கிறது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 22 ஏப்ரல், 2026

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐம்பது வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கு . வியாபார விசா மூலம்  வருகை தந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (21) கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், 2 மலேசிய நாட்டவர்களும், ஒரு இந்திய நாட்டவரும் அடங்குகின்றனர். இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது
இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு
 அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் என்றும், இது நோயாளிகள்,
 மருத்துவமனைகள் மற்றும் முழு சுகாதாரக் கட்டமைப்பையும் கடுமையான 
அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உலகளாவிய விநியோகச் சங்கிலி 
செலவுகள், செலாவணி விகித அழுத்தங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தாமதங்கள் ஆகியவை மருந்துகளின் தடையற்ற ஓட்டத்தைப்
 பராமரிப்பதில் பெரும் சவால்களை 
ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, எரிபொருள் விலைகள் சுமார் 38 வீதத்தாலும், சரக்குக் கட்டணங்கள் 40 வீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன. அத்துடன், மருந்து மூலப்பொருட்களின் உலகளாவிய 
விலைகள் சில
 சந்தர்ப்பங்களில் 70 வீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை இறக்குமதி செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய இறக்குமதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் மற்றும் விலை மீளாய்வு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் இந்த அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதாக SLCPI குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், முறையான விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகும் போது, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத வழிகள் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது 
தரமற்ற அல்லது
 போலியான மருந்துகள் பொதுமக்களை அடையும் அபாயத்தை அதிகரிப்பதுடன், நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என சம்மேளனம் எச்சரித்துள்ளது.
எனவே, இறக்குமதி உரிமச் செயலாக்கத்தில் உள்ள தாமதங்களை நிவர்த்தி செய்து, மருந்து விநியோகச் சங்கிலியை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மேளனம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
விநியோகச் சங்கிலியில் இன்றைய அழுத்தம் நாளைய தேசிய மருந்துப் பற்றாக்குறையாக மாறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இலங்கை மருந்துச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

லுஃப்தான்சா விமான பயணங்களை எரிபொருள் தட்டுப்பாடால் ரத்து செய்துள்ளது.

ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா குழுமம் சுமார் 20000 பயணங்களை 
இரத்து செய்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன் இயக்கும் குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் என்றும், இது தொடர்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

ஈரான் வான் வெளியில் வானூர்தி மீண்டும் பறக்கத் தயார் போக்குவரத்து வழமைக்குத் திரும்புகிறது

நடந்த போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி
 சேவைகளை 22-04-2026. நாளை  முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெஹ்ரான் மற்றும் மஷாத் (Tehran-Mashhad) ஆகிய நகரங்களுக்கு இடையிலான வானூர்தி சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த வானூர்தி சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்தன

நாட்டில்  2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பிரசித்திபெற்ற கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2025ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் திருக்குமரன், மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்டாவளைக் கோட்டத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பணப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன் ஆலயத்தால் நடத்தப்படும் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான இந்தப் பணியை 
 இந்த இணையமும் வாழ்த்துகின்றன . பரிசில்கள் பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








 

Blogger இயக்குவது.