இலங்கையில் கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த 3 நாட்களில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதில் அதிகப்படியான வாகனப் போக்குவரத்தும் வருமானமும் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் 161,847 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 59,815,450 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி 1,53,807 வாகனங்களுக்காக ரூ. 5,82,08,695 வருமானமும் 12-ஆம் திகதி 1,18,684 வாகனங்களுக்காக ரூ. 4,52,66,920 வருமானமும் ஈட்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக