.நாடு முழுவதும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 2000 விசேட முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தமை
மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை
விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக