நாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைமில் நாளார்ந்தம் பல ஆயிரம் நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்ற நிலையில் வைத்தியசாலையில் மருந்தாளருக்கான வெற்றிடம் காணப்படுவதால் மருந்துகளை பெறும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ..என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக