திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

  இலங்கையில்  இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 331.99 ரூபா
ஜப்பானிய யென் 2.10 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 451.89 ரூபா
யூரோ 387.69 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.29 ரூபா
சுவிஸ் பிராங் 415.03 ரூபா
கனடிய டாலர் 240.56 ரூபா
கத்தார் ரியால் 91.77 ரூபா
குவைத் தினார் 1077.42 ரூபா
சவுதி ரியால் 89.75 ரூபா
என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்று இலங்கையில் தங்கத்தின் விலை நிலவரம்


இன்று இலங்கையில்  1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 49,070 ரூபாய் ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 44,990 ரூபாய் ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 36,810.00 ரூபாய் ஆகவும் உள்ளது.
18 கரட் தங்க விலை
1g விலை LKR 36,810.00
8g விலை LKR 294,480.00
10g விலை LKR 368,100.00
22 கரட் தங்க விலை
1g விலை LKR 44,990.00
8g விலை LKR 359,920.00
10g விலை LKR 449,900.00
24 கரட் தங்க விலை
1g விலை LKR 49,070.00
8g விலை LKR 392,560.00
10g விலை LKR 490,700.00
என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் திருகோணமலை கன்னியா வெந்நீருற்றிற்கும் காலக்கெடு

 நாட்டில் திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, தற்போதுள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு 
பிறப்பித்துள்ளது.
அத்துடன், மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, தொல்லியல் திணைக்களம் குறித்த கன்னியா பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் என்ன வகையான நிர்மாணத்தை மேற்கொள்கின்றது என்பது குறித்த எழுத்து மூல அறிக்கையைத் தமது தரப்பில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜீவன் மன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
அதன்படி, இவ்வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்காளி தரப்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி 
சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் “தொல்பொருள் என அடையாளம் காணப்பட்ட விடயத்தைப் பாதுகாப்பதற்குத் தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்து உண்டு. அதன்படி, இங்கு இருப்பதாகச் சொல்லப்படும் பண்டைய தூபியை அது தற்போது உள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு 
உரித்து உண்டு 
அந்த இணக்கப்பாட்டின் படியே அங்கே இருந்த பிள்ளையார் கோயில் இன்னுமொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அரசாங்கத்தின் இணக்கத்தோடு அதற்கான இட ஒதுக்கீடும்
 செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்குத் தொல்லியல் திணைக்களம் நடவடிக்கைகள் எடுத்ததை அறிந்து, நீதிமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு மாறாகத் தொல்லியல் திணைக்களம் நடந்து கொள்கின்றது என்று, குறித்த காணியின் உரிமையாளர் சார்பில் சட்டத்தரணி திருமதி. பிரசாந்தி உதயகுமார் நகர்த்தல் பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
 கொண்டு வந்தார்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆவது பிரிவில், காணி உரிமையாளருக்கும் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையிலே குறித்த காணியில் அடையாளம் காணப்படும் தொல்லியல் விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அந்தத் தொல்லியல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தமாக 
அது அமையும்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் சொல்லப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்திலே, மிகவும் விசேடமாக ‘பாதுகாப்பு மட்டும்’ என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, அங்கு வேறு ஏதும் செய்யவோ, குறிப்பாகப் புனரமைப்பு செய்யவோ முடியாது; உள்ளவற்றைப் பாதுகாக்க மட்டுமே முடியும்.
வேறு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வேறு அதிகாரங்களை இங்கு அவர்கள் பாவிக்க முடியாது; ஏனெனில், பாதுகாப்பது தவிர அந்த இடத்தில் வேறு எந்தச் செயலையையும் செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் அவர்கள் எங்களோடு இணங்கியிருக்கிறார்கள். இதனடிப்படையிலேயே நாம் இந்த விடயத்தைக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்” என சுமந்திரன்; தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

நாட்டில் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி சவுண்ட் விட கட்டுப்பாடு

இலங்கையில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது 
தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி 
அளிக்கப்பட மாட்டாது.
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது 
என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டு மக்களுக்கு நோர்வேயின் புதிய மன்னர் ஹாக்கான் முதல் உரையை ஆற்றினார்

நாட்டு மக்களுக்கு நோர்வே மன்னர் எட்டாம் ஹாக்கான்,  மன்னராகப் பதவியேற்ற பிறகு  ஆற்றிய தனது முதல் உரையை 
ஆற்றினார்.
தனது மறைந்த தந்தை ஐந்தாம் ஹரால்டு மன்னரை அற்புதமான அப்பா என்று அழைத்து அஞ்சலி செலுத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உங்கள் விழுமியங்களில் உறுதியாகவும், உங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புடனும் இருந்த 
ஒருவராக இருந்தீர்கள்.
நாங்கள் அவரது இழப்பால் பெரிதும் துயருறுகிறோம். அதே சமயம், எங்களுடன் சேர்ந்து துயருறும் பலர் இருக்கிறார்கள் என்பதை அறிவது எங்களுக்கு ஆறுதலையும் வலிமையையும் அளிக்கிறது என்றார்.
தனது தந்தையை ஒரு அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள குடும்ப மனிதர் என்று புகழ்ந்தார்.
கணவனை இழந்த தனது தாய், ராணி சோன்ஜாவைப் பற்றிப் பேசும்போது ஹாக்கன் உணர்ச்சிவசப்பட்டார். சனிக்கிழமையன்று தனது பெற்றோர் தங்களது 58வது திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாடியிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு முன் தன் தந்தை சென்றது போலவே, தனது சொந்தப் பாதையில் செல்வதாகவும், அதேவேளையில் நார்வேயின் அரசியலமைப்பு முடியாட்சியின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் ஹாக்கான் கூறினார். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைக் காப்பதாக அவர் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம்
 செய்ய உள்ளார்.
நாங்கள் எங்களது தன்னாட்சி முறையிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் அமைந்த, ஒவ்வொரு தனிநபருக்கும் சம மதிப்பு உள்ள ஒரு சமூகத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
தன் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து ஹாக்கான் தானாகவே மன்னரானார். 1908-ல் நாடாளுமன்றத்தால் ஒழிக்கப்பட்ட முடிசூட்டு விழாக்கள் நார்வேயில் நடைபெறுவதில்லை.
ஆனால், அவருக்கு முன்னிருந்த அவரது தந்தை மற்றும் தாத்தாவைப் போலவே, 1814 மற்றும் 1906-க்கு இடையில் நார்வே மன்னர்கள் முடிசூட்டப்பட்ட ட்ரான்ட்ஹெய்ம் பேராலயத்தில் நடைபெறும் அபிஷேக விழாவை ஹாக்கன் தேர்வு செய்துகொள்ளலாம்.
அரச குடும்பமும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஹாக்கனின் மனைவியான ராணி மெட்டே-மாரிட், மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், அவரது முந்தைய உறவின் மூலம் பிறந்த மகனுக்கு  இரண்டு பாலியல் வன்கொடுமைகளுக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ; அந்தத் தண்டனையை அவர் மேல்முறையீடு செய்து வருகிறார்.
கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட 53 வயதான மெட்டே-மாரிட், கடந்த ஜூலை மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


ஜஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் பேச்சுவார்த்தையை நிராகரித்தனர்

.  ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறுப்புரிமைப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஐஸ்லாந்து 'இல்லை' என வாக்களித்ததாக இறுதி வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காட்டின.
ஒரு புதிய  உறுப்பினரை வரவேற்பதில் ஆர்வமாக இருந்த பிரஸ்ஸல்ஸுக்கு இது ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், 13 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நுழைவுப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதை 52.8 சதவீத ஐஸ்லாந்து மக்கள் நிராகரித்துள்ளனர், அதே நேரத்தில் 47.2 சதவீதம் பேர் 'ஆம்' என்று 
வாக்களித்துள்ளனர்.
சுமார் 400,000 மக்கள்தொகை கொண்ட அந்த நாடு, தனது பொருளாதாரத்தைச் சீர்குலைத்த 2009 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்தது.
பின்னர் 2013-ல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ​​உறுப்பினர் சேர்க்கைப் பேச்சுவார்த்தைகள் 
இடைநிறுத்தப்பட்டன.
அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில், சமூக ஜனநாயகப் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் தலைமையிலான ஐஸ்லாந்தின் தற்போதைய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தங்கள் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து ஐஸ்லாந்து மக்களின் கருத்தைக் 
கேட்க விரும்பியது.
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் தடையற்ற நடமாட்டத்திற்கான ஷெங்கன் மண்டலம் ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதால், இந்த சிறிய வட அட்லாண்டிக் தீவு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. எனினும் இந்தத் தொடர்புகள் 
மாற்றமின்றித் தொடரும்.
தொழில்நுட்ப ரீதியாக, பொது வாக்கெடுப்பின் முடிவு சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது, ஆனால் அதனை மதிப்பதாக அரசாங்கம் 
உறுதியளித்துள்ளது.
அரசாங்கம் தனது திட்டங்களை முன்வைப்பதற்காக, நாளை பிற்பகல் 1 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தும்.  என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நீதிக்கான நீள் பயணம்: நாளை

நாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில்
 நடைபெறவுள்ளது.
நாளை காலை 09:00 மணிக்கு  தந்தை செல்வா கலையரங்கத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது
மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்து மாநாட்டு அமர்வுகள் தொடங்கும்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாகக் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வரும் ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் விரும்பிப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள், மனித உரிமை மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 29 ஆகஸ்ட், 2026

நாட்டில் தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை

நாட்டில் .கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம் யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின்
 உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

நாட்டில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதியினர்,

இலங்கை  மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நீங்கள் முருங்கைக்கீரை வாரத்திற்கு குறைந்தது 3–4 முறை சாப்பிடுங்கள்!

 

நாம் பல விலையுயர்ந்த சப்ப்ளிமென்ட்களைத் தேடி அலைகிறோம். ஆனால் நம் வீட்டு அருகிலேயே கிடைக்கும் முருங்கைக்கீரை ஒரு சத்துமிக்க இயற்கை உணவு! முருங்கைக்கீரையில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் C உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்:
 ✔️ நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க உதவும்
 ✔️ இரும்புச்சத்து கிடைக்க உதவும்
 ✔️ எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்
 ✔️ கண் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்
 ✔️ செரிமானத்திற்கு உதவக்கூடும்
 ✔️ உடலின் இயல்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதுகாப்பை ஆதரிக்கிறது

 🥬 வாரத்திற்கு 3–4 முறை முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

கிளிநொச்சி.கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை
 தனது தாயார் பெர்னதேத்தம்மாவின் நினைவாக மற்றுமொரு 
இயந்திரமும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் 
மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்
திரு  சிவஞானம் சிறீரன்,
“போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மண், இழப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் இந்தச் சூழலில், மக்களின் உயிரைக் காக்கும் இத்தகைய உயரிய உதவி என்பது நெஞ்சார நினைவுகூர்ந்து 
போற்றத்தக்கது. சிறுநீரக நோயாளிகளின் அவசியத் தேவையை உணர்ந்து, வட மாகாண மருத்துவமனைகளின்
 மேம்பாட்டிற்காக இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களை வழங்கி பேராதரவு தந்த செந்தில்குமரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
 எனத் தெரிவித்தார்.
கனடா கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் மூலம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை (Kilinochchi DGH), மல்லாவி ஆதார மருத்துவமனை
 (Mallavi BH) மற்றும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை (Vavuniya DGH) ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆறு இரத்தச் சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு 
நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான 
கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் நிறுவனர் செந்தில்குமரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சேரலாதன், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் 
வேழமாலிகிதன், பூநகரிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், இலங்கைக்கான கனடா 
உயர்ஸ்தானிகராலய அரசியல் அலுவலர் சாகித்தியனன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர்களான கௌரவ சிவமோகன், கௌரவ 
ஆனந்தவடிவேல், கௌரவ எழில்வேந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் திரு குணராஜ், மாவட்ட பொது மருத்துவமனையின் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இன்றைய தினம் யாழ் தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் 
வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்  கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை  ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் முன்நூறு கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை

நாட்டில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின்கலன்களை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 26 ஆகஸ்ட், 2026

யாழ் பலாலி வீதியில் செல்வ சந்நிதி உற்சவத்தை அடுத்து மக்கள் நடந்து செல்ல அனுமதி

யாழ்  தொண்டமானாறு  செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் 
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடாக செல்லும் பலாலி வீதி கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு , நேர கட்டுப்பாட்டுடன் வீதி 
திறந்து விடப்பட்டது.
இந்நிலையில்  தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு செல்லும்
காவடிகள் , பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும் , வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



.நாட்டில் வடக்கில் காணிகளை விடுவிப்போம் - விடுவிக்காத காணிகளுக்கு இழப்பீடு

யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரட்ணாயக்க 
தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அது தொடர்பான உத்தரவுகளை 
பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
கடந்த 36 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பலாலி வீதியை நாம் முழுமையாக நாம் திறந்து வைத்தோம். அதேபோல் காணிகளையும் விடுவிப்போம்.
கடந்த காலங்களில் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் அதன் உரிமையாளர்களை விவசாயம் செய்ய மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர். 
தற்போது அந்த காணிகளை முழுமையாக விடுவித்து அந்த காணிகளில் வீடமைத்து அதில் உரிமையாளர்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டவுள்ளனர்.
அத்துடன் பலாலி கிழக்கில் உள்ள காணிகளை 
விடுவிப்பதுடன், ஏனைய பகுதிகளில் முப்படையினர் வசமுள்ள சிறிய சிறிய காணிகளையும் முற்றாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காணிகளை விடுவிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கு தீர்வினை
 பெறுவது அல்லது, அதற்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்  
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திபெத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் கிராமங்களை அழித்தது

.இன்று நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்த நிலையில், எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
கடுமையாக உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் ஏற்படலாம். ஆனால், தற்போதைக்கு என்னால் உறுதியாகக் கூற முடியாது என நேபாள பிராந்திய அதிகாரி நரேந்திர பரியார் ராய்ட்டர்ஸிடம் 
தெரிவித்தார்.
நேபாளம், மலைப்பாங்கான ரசுவா பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் வெள்ள நீர் மட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க
 முடியவில்லை.
மீட்புப் பணிகளுக்கு ராணுவமும் காவல்துறையும் உதவி வருவதாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

தற்போது முழுமையாக கம்பஹாவில் நீர் விநியோகம் வழமைக்கு

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம்  முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக 
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 
தெரிவித்துள்ளது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெறும் பகுதியில் நீரின் தரம் தொடர்பில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாகப் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

இன்று bமாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிநாள்: 223ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு


நாட்டில் .வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்   இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை ( 25)  வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணர்வெழுச்சியுடன் 
இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள்
 மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுவில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம்
 ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிரோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




சூறாவளியால் பிரான்சில் வீடுகள் சேதமடைந்தன: பலர் காயமடைந்தனர்!

சூறாவளியால் தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை திங்களன்று தாக்கிய சூறாவளி, டஜன் கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, சுமார் 40 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .
பைரனீஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளதும், சுமார் 1,000 மக்கள் வசிப்பதுமான போமாஸ் நகரம் மிகக் கடுமையாகப் 
பாதிக்கப்பட்டது.
சூறாவளியால் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன; மரங்கள் வேரோடு சாய்ந்தன, சில கட்டிடங்களின் கூரைகளும்
 பெயர்ந்து விழுந்தன.
வீட்டிற்குள் இருந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் உட்பட பதினைந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி 
வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணிகளுக்கு உதவுவதற்காக 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் அவசரகாலப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
வீடுகள் சேதமடைந்த மக்களுக்காக அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை திங்களன்று தாக்கிய சூறாவளி, டஜன் கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, சுமார் 40 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள்
 தெரிவித்தனர் .
பைரனீஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளதும், சுமார் 1,000 மக்கள் வசிப்பதுமான போமாஸ் நகரம் மிகக் கடுமையாகப் 
பாதிக்கப்பட்டது.
சூறாவளியால் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன; மரங்கள் வேரோடு சாய்ந்தன, சில கட்டிடங்களின் கூரைகளும்
 பெயர்ந்து விழுந்தன.
வீட்டிற்குள் இருந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் உட்பட பதினைந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி 
வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணிகளுக்கு உதவுவதற்காக 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் அவசரகாலப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகள் சேதமடைந்த மக்களுக்காக அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரங்கள் விழுந்ததால் சாலைகள் மூடப்பட்டன, ரயில்கள் தாமதமாகின, அதே நேரத்தில் போர்டோ, மார்சேய், நைஸ், துலூஸ் மற்றும் பாரிஸ் விமான நிலையங்களில் விமானத் தாமதங்கள் மற்றும் 
ரத்துகள் பதிவாகின என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் கூறினார்.
ஆட் மாகாணத்தில் நடைபெறவிருந்த வுவெல்டா எஸ்பானியாவின் மூன்றாவது கட்ட சைக்கிள் பந்தயம், ஆலங்கட்டி மழையால் தடைபட்டதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மன்னார் படுகை எண்ணெய் ஆய்வு உரிமங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மன்னாரில் இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகைக்கான இந்த ஆண்டின் எண்ணெய் ஆய்வு உரிமச் சுற்றை இன்று அதிகாரப்பூர்வமாகத் 
தொடங்கி வைத்தது
இந்நிகழ்ச்சிக்கு மின்சாரம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகே மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர்
 தலைமை தாங்கினர்.
இந்தத் திட்டத்தின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு ஆய்வுத் தொகுதிகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
முந்தைய ஆய்வுகள், இயற்கை எரிவாயு மற்றும் கண்டன்சேட் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுடன், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் இருப்பை உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நவீன புவியியல் நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வுகளை நடத்துவதற்கும், ஆணையத்திடம் ஏற்கனவே உள்ள புவியியல் தரவுகளை அணுகுவதற்கும் சர்வதேச 
நிறுவனங்களுக்கு இனி வாய்ப்பு கிடைக்கும் என்று தலைமை
 இயக்குநர் நீல் டி சில்வா கூறினார்.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, இந்தப் படுகையில் துளையிடுதல் மூலம் 2 பில்லியன் பேரல் பெட்ரோலியமும், 9 டிரில்லியன் கன அடி எரிவாயுவும் கிடைக்கக்கூடும்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று விகித பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டாலர் 333.51 ரூபா
ஜப்பானிய யென் 2.13 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 456.48 ரூபா
யூரோ 391.62 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 241.19 ரூபா
சுவிஸ் பிராங் 419.52 ரூபா
கனடிய டாலர் 243.60 ரூபா
கத்தார் ரியால் 92.20 ரூபா
குவைத் தினார் 1082.70 ரூபா
சவுதி ரியால் 90.15 ரூபா
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் காணி விடுவிப்புப் போராட்டத்தில் சுமந்திரன் குழுவும் பங்கேற்றது

யாழ்  வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.
பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக 10 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள், தமது பூர்வீக காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கோரி போராடி வரும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை உரிய முறையில் விடுவித்து, மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




நமது பாரம்பரிய உணவு மிகவும் சத்தான மற்றும் சுவையான உளுத்தம் களி

நாம் உளுந்தங்களி . இதை மிக இலகுவாகவும் கட்டியில்லாமலும் செய்யும் எளிய முறை இதோ:
​தேவையான பொருட்கள்:
​கருப்பு உளுந்து (தொலி உளுந்து) – 1 கப்
​பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்
​வெல்லம் அல்லது கருப்பட்டி – 1.5 கப் (இனிப்பிற்கு ஏற்ப)
​நல்லெண்ணெய் – 1/2 கப்
​ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
​சுக்குத் தூள் – 1/4 டீஸ்பூன்
​தண்ணீர் – 3 முதல் 4 கப்
​செய்முறை:​மாவு தயாரித்தல்
​கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் வாணலியில் போட்டு மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.
​ஆறவைத்த பின், மிக்ஸியில் போட்டு நைசான மாவாக அரைத்துக்கொள்ளவும். (கடைகளில் கிடைக்கும் உளுந்தங்களி மாவையும் பயன்படுத்தலாம்).
​பாகை கரைத்தல்:
​ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை சூடாக்கி வடிகட்டி தனியாக வைக்கவும் (பாகு பதம் தேவையில்லை).
​மாவு கரைத்தல்
​ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு, 2.5 கப் தண்ணீர் ஊற்றி கட்டி ஏதும் இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
​களி கிண்டுதல்:
​கரைத்து வைத்த மாவை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து கெட்டியாகத் தொடங்கும்.
​மாவு வெந்து பளபளப்பாக வரும்போது, வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும்.
​இதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்க்கவும்.
​நல்லெண்ணெய் சேர்த்தல்:
​களி கெட்டியாக வரும்போது, எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றித் தொடர்ந்து கிளறவும்.
​களி பாத்திரத்தில் ஒட்டாமல், ஊற்றிய எண்ணெய் தனியாக பிரிந்து திரண்டு வரும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
​குறிப்பு: கையில் சிறிதளவு தண்ணீரைத் தொட்டுவிட்டு களியைத் தொட்டுப் பார்த்தால், களி கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்!
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

நாட்டில் இன்றைய வானிலை: பல பகுதிகளில் மழை பெய்யும் அறிகுறி

நாட்டில் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், 
திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30–40 கி.மீ. வேகத்தில் ஓரளவு 
பலமான காற்று வீசக்கூடும். 
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொள்கிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




Blogger இயக்குவது.