செவ்வாய், 1 செப்டம்பர், 2026

லண்டனில்.உள்ள பொலிஸ் பாய்க்கு பிடியாணை தொடர்கிறது

நாட்டில் மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸ{க்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி  
கட்டளையிட்டுள்ளது.
ஏற்கனவே  கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த
 வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.
ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு
 எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று 
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர். 
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாகிஸ்தானியர்கள் கைது

நாட்டில் கொள்கலன் ஒன்றில் கொழும்பு துறைமுகத்தில்  மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 முன்னதாகச் சந்தேகத்திற்குரிய கொள்கலனைச் சோதனையிட்ட போது அதிலிருந்து 463 கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமைஎன்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் திருகோணமலையில் வறட்சி: குளங்கள் வற்றின: கால்நடை நீருக்காக அலைகின்றன

நாட்டில் திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்  புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு வரும் நிலை 
ஏற்பட்டுள்ளது.
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். குளம் முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
 விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, பல குளங்கள் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் கால்நடைகள் நீருக்காகவும், தீவனத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
மூதூர், தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம், இத்திக்குளம், மறவட்டகுளம் உள்ளிட்ட பல குளங்கள் தற்போது நீரின்றி வறண்டு 
காணப்படுகின்றன.
அதேவேளை, மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கருகியுள்ளதால், கால்நடைகள் உணவு மற்றும் நீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள்
 தெரிவிக்கின்றனர்.
என்றுமில்லாத வகையில் இம்முறை கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளின் உயிரிழப்பு மற்றும் கால்நடை வளர்ப்பின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக மூதூர் , தோப்பூர் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் அவசர தீவன வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


Blogger இயக்குவது.