நாட்டில் கொள்கலன் ஒன்றில் கொழும்பு துறைமுகத்தில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாகச் சந்தேகத்திற்குரிய கொள்கலனைச் சோதனையிட்ட போது அதிலிருந்து 463 கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமைஎன்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக