கலைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

இலங்கைத் தமிழர்களின் மொழியை புகழ்ந்து பேசிய திரைப்பட நடிகர் நாசர்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் 
புகழ்ந்து பேசியுள்ளார்.

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் பேசுவதை விட உங்களைப் பேச விட்டு நான் கேட்பது தான் மிகவும் சுவையான ஒன்றாக இருக்கிறதுஏனென்றால் நீங்கள் பேசுகின்ற அந்த தமிழ் எனக்கு பாடல் போல் இருக்கிறது. எங்கள் புழக்கத்தில் இருந்து விடுபட்ட பழந்தமிழை இன்னும் நீங்கள் மிகவும் எளிதாக, சுவாசத்தில் ஒன்றாக அந்த வார்த்தைகளை அழகாக கையாளுகிறீர்கள்.

அதற்காக நான் தலைவணங்கி அன்பு செலுத்துகிறேன். எடுத்துக்காட்டாக நித்திரை என்று சொல்லுகின்ற வார்த்தை, அந்த ஒரு சொல் எங்கள் எழுத்து வழக்கிலும் போய்விட்டது.

இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

எஸ்.பி.பியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்நலம் வேண்டி பிரார்த்தனைகள்

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி கடந்த 5ஆம் திகதி எம்.ஜி.எம் 
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.
குறித்த காணொளியில் தான் நலமாக இருப்பதாகவும், தொலைப்பேசியில் யாரும் அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை நாளுக்கு 
நாள் மோசமடைந்திருந்தது. தற்போது செயற்கை சுவாச கருவியுடன், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சை 
பெற்று வருகிறார்.இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை அவ்வவ்போது 
வெளியிட்டு வருகிறது.இதன்படி,20-08-20. நேற்று
 வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது
 உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
.இதற்கிடையில் நேற்று திரைபிரபலங்கள் பலரும் அவருக்காக கூட்டுப்பிராத்தனையில் ஈடுப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 15 ஆகஸ்ட், 2020

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் 
அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 29 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில் 
விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர் கூட பல இடங்களில் அதை செய்து காட்டியவர்..யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்திலும் இதை செய்து காட்டியவர்…இவரது இந்த
 திறமை திரு.வேலணை வீரசிங்க்ததையும் கவர்ந்தது…அவரும் திராவிட கழக ஆதரவாளர்..எனக்கும் பழக்கமானார்…நான்..அமரர் .கணேசபிள்ளை அண்ணை..வீரசிங்கம் அன்னார சகிதம்.இவர் மனைவி இறந்ததை அறிந்து சென்றோம்…ஆச்சரியம்..அந்த மரண
 வீட்டில் யாரும் இல்லை ..ஒரு மகன் அவரும் வரவில்லை…இறந்த அவர் மனைவியின் உடல் எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது… அருகில் யாரும் 
இல்லை ..மேல்மாடியில் கோவூர்.. எமக்கு மனதை உறுத்தியது..என்ன சொல்ல..வருத்தம் சொல்லவா..வாய் திறக்கும்
 முன்னர் கை காட்டினார்…சொன்னார் 50 ஆண்டு காலம் என்னோடு வாழ்ந்தா..இன்னும் சிறிது நேரத்தில் போதனா வைத்தியசாலை நபர்கள் வந்து கொண்டு செல்வார்கள் என்று..இப்போ இவர் மீது சாதுவாக எனக்கு பயம் வந்து விட்டது என்றே சொல்லலாம்…
அது சரி ..இவருக்கும் எமது நாடகத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா…இவர் ஒரு மனோ தத்துவ டாக்டரும் கூட….இவர் வாழ்வில் ஒரு நோயாளிக்கு நடந்த உண்மை கதை..நம்பிக்கை… என்ற பெயரில் நாடகமாக உருவானது
..மிக அருமையான கதை..
இந்த நாடகத்தில்…ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆபிரகாம் கோவூராக.. எதிர் மறை மந்திரவாதியாக நான்…கபட தபால் காரனாக கே.எஸ்.பாலச்சந்திரன்…வெளிநாடு சென்ற கணவனை எதிர்பார்த்து ஏங்கும் மனைவியாக மணிமேகலை ராமநாதன்…பெற்றோராக.
. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..சந்திரபிரபா மாதவன்….இதில் பேய் பிடித்த மணிமேகலைக்கு பேய் விரட்டும் காட்சி..நானும் மணிமேகலையும் உடுக்கு வாத்தியத்துக்கு கற்ப்பூர சட்டியியுடன் ஆடும் ஆட்டம் மக்கள் ஆர்வத்துடன்..குழந்தைகள் அழுகுரல்
 பயத்தில்… கொழும்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் படி தொட்டி எங்கும்… இ.போ.ச.பஸ் தொடங்கி..டாக்ஸி வரை எனதும்..மணியின் படமும் தான்… ஒருமுறை தீச்சட்டி தடம் புரண்டு
 என் மேல் கொட்டியது..இந்த நாடகம் வடமாகாணத்தில் பல இடங்களில் நடந்தாலும்…கொடிகாமம் மகா வித்தியாலயத்தில் நாடகம்..முன்னர் தலைமை ஆசிரியர் இந்த நாடகத்தை 
பார்த்துள்ளார்..என்னிடம் வந்து சொன்னார் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்..இந்த மாமரதிலை காய்க்கிற காய் ஒண்டையும் பெடியள் விடுறாங்கள் இல்லை ..நீங்கள் பேயாடி 
ஒரு மரத்தில் பேயை ஆணி அறைந்து கட்டுவீர்களே..அதை இந்த மரத்தில் செய்யுங்க என்றார்.. அதன் படி நானும் 
செய்தேன்…இரண்டாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக அவரை கண்டேன்.. சொன்னார் பொடியள் அந்த மரத்தடி பக்கமே போவதில்லை என.இப்படி… படித்ததற்கு நன்றி....   /தொடரும் 



வெள்ளி, 21 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…4

தொடர்ந்தும் ..புளுகர் பொன்னையாவே……நாடகங்களை மண்டபங்களில் நடத்தும் போது பிரச்சனைகள் குறைவு.நேரத்திற்கு தொடங்கி நேரத்திற்கு முடிந்து விடும்.. வெளியிடங்களுக்கு சென்று பரந்த வெளிகளில் நடாத்தும் போதும்.. வெளியூர்களில் நடாத்தும் போதும் பல புது அனுபவங்கள்…
திரு.வேலணை வீரசிங்கம் அண்ணனுக்கு இந்த நாடகத்தை தன சொந்த ஊரான வேலணையில் மேடையேற்ற வேண்டும் என்ற ஆவல்.செயலில் இறங்கி.. வேலணை மகா வித்தியாலயத்தில் நாடகம்..ஒப்பனை தொடங்கிவிட்டது..நேரம் 7.30 க்கு மேல்..திடீரென கே.எஸ்.பாலச்சந்திரன் மயங்கி விட்டார்..என்ன நடந்தது ,எல்லோரும் கலங்கி என்ன செய்வதென்றறியாத நிலையில் ,அவராலும் தன்னிலை சொல்லமுடியா நிலை..எல்லோரும் பதறியபடி..அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. கிட்டிய மருத்துவமனை..ஊர்காவற் துறை ..மகாவித்தியாலம் மைதானம் மக்கள் கூட்டம்.. செய்வதறியாது அவரை காரில் தூக்கி சென்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்…வலி நெடுக மக்கள் நாடகம் பார்க்க வந்து கொண்டிருந்தனர்..இதற்குள் வைத்தியசால சென்று விட்டோம்.. பரிசோதனை செய்த வைத்தியர்,,கேர்னியா என்றார்.. அவருக்கு ஆபரேசன் செய்யவேண்டும் என்றார்..எங்களுக்கு செய்வதறியா நிலை..நாங்கள் மன்றாடினோம்..பின்னர் சொன்னார் ஒரு ஊசி ஒன்று போடுகிறேன் ..அது கூட ஒரு மூன்று மணித்தியாலம் தான்.வலி இல்லாமல் இருக்கும் ,ஆனால் நாடகம் நடிக்க முடியுமோ தெரியாதென்று…திரும்பவும் நாடகம் நடைபெறும் மைதானம் வந்து விட்டோம்..என்ன செய்வது..நாடகம் நடத்துவதா விடுவதா என்ற நிலை.. நிலைமையை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தோம்.. இதற்குள் பாலா.. அண்ணை நான் ரெடி.. சொல்லுங்கோ நாடகம் நடக்கும் என்று…மைதானம் விசில் சத்தத்தால் கும்மாளம் இட்டது..நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது கடைசி பத்து நிமிடம் இருக்கும் போது மீண்டும் அவருக்கு வருத்தம்.மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம்…தவிர்க்க முடியாத நிலையில் ..பாலா இல்லாமல் கடைசி காட்சி..இதில் பாலச்சந்திரன் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர்..தம்பையா… நான் பொன்னையா அண்ணை எங்கை தம்பையனை காணேல்ல ஒன்டாதானே திரிவீங்க என்று…. அதற்க்கு பொன்னையா .. டேய் அவனுக்கு சுகமில்லை ஆள் இப்ப ஆசஸ்ப்பதிரியைல போய் பாக்க வேணும் என்று..இதற்கும் புரிந்த ரசிகர்கள் சிரித்தனர்…உடனே வீரசிங்கம் அண்ணர் மிகுந்த வருத்தத்துடன் ஒரு அறிவித்தலை மக்களுக்கு அறிவித்தார்… மீண்டும் இந்த நாடகம் இங்கே போடுவோம்,,,நீங்கள் கையி வைத்திருக்கும் இந்த டிக்கட் காணும் என்று.. மக்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்…மூன்று வாரங்களுக்கு பின்னர் இதே மைதானத்தில் நாடகத்துடன்… எ.ஈ.மனோகரன்.. என்.இமானுவல்..மற்றும் பல பொப் இசைபாடகர்களுடன் மிக விமரிசையாக நடத்தி முடித்தார்.. நண்பர்.. அப்துல் ஹமீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..இந்த நாடகத்தை பார்க்க எனது மனைவியும் வந்திருந்தார்..நாடகம் முடிந்த பின்னர் தான் இசை நிகழ்ச்சி.. நான் மனைவியுடன் பேசுவதற்காக வந்தபோது தனக்கு தெரிந்தவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி ..சொன்னார் இப்பிடி இருங்கோ.. மேடையில ஆட போகவேண்டாம் என..ஆனால் எனது நண்பன்..இசையமைப்பாளர்..பாடகன்.என்.இமானுவேல்..என் சக உத்தியோகத்தன்,,என்னை அன்பாக அழைத்து இந்த பாடல் இங்கு நன்றாக வேண்டும்.. நான் பாடும்போது நீ ஆட வேண்டும் என
, நேரமும் வந்தது.. இமானுவேல் பாடதுடங்க
..நான் ஆடிக்கொண்டு மேடை வர.. நண்பர் அப்துல் ஹமீத் நாடகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை.சொல்லி ஆஹா கந்தப்பர் மேடையில் துள்ளிசைக்கு நடனமாட என… 
மக்கள் ஆரவாரம். அவர் பாடிய அந்த பாடல்….சித்திர கன்னிகள் ஊர்வலம் போகும் சிங்காரம் பார் என தொடங்கும்….அப்போது
 மேடையில் துள்ளிசைக்கு ஆடுபவர் யாழில் குறைவு,,நிகழ்ச்சி நடைபெறுவதும் குறைவு… 
எல்லோருக்கும் மகிழ்ச்சி வீடு செல்லும் வரை என் மனைவியின் முகத்தில் எரிச்சல்… வீடு சென்றதும்.. நான் அவளவு சொல்லியும்.. எனக்கு தெரிஞ்ச ஆக்கள் இருந்தவை.. என்று..இன்றும் இந்த வயதிலும் துள்ளிசை என்றால் என்
 கால்கள் சும்மா இராது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 5 ஜூலை, 2017

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத வரணியூரான் மானிப்பாய் யூரான்

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத பெயர்கள்.
.மானிப்பாய்யூரான் மற்றும் நவக்கிரியூரான்  வாடைக்காற்று  புகழ்   திரு.கந்தசாமி  மற்றும்  வரணியூரான்.. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..60 பதுகளில் இருந்து 83 வரை .. பின்னரும் சிறிது காலம்…95 வரை…
நாடகமே அவர் உயிருக்கு உலை வைத்தது…ஒரு நடிகன் தன குரலால் உயிர் இழந்தான்.முதல தடவை ,, அதுவும் எமது நாட்டில் தான்…சரி வருவோம் அவர் பற்றி தெரியாத கலைஞர்களுக்காக ….
இந்த மாபெரும் கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பன்.. திரு..கே,கே,மதிவதனன்…கவிஞன் ..நடிகன் நாடக எழுத்தாளன்….திரு.கணேசபிள்ளை அவர்கள் கொழும்பில் யாழ்.கலை.அரங்கம் என்ற பெயரில் ஒரு 
மன்றத்தை நடத்தி .. மிக சிறந்த நாடகங்களை எழுதி இயக்கி.. வானொலி நாடகங்கள் எழுதி இயக்கி யாழ் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தார்.. அப்போது அவருக்கு ஒரு நடிகர் தேவை.
. இதை மதிவதனிடம் சொல்லி இருக்கிறார்..சில மாதங்களுக்கு முன்னர் தான் நான் திருகோணமலையில் இருந்து மாற்றலாகி கொழும்பு வந்த நேரம்… மதிவதனன் என்னை நன்கு அறிவார்.. நான் சொந்தமாக ஒரு மன்றம் அமைத்து நாடகங்கள் மேடையேற்றி.
.மற்றவர்கள் கேட்க்கும்போதும் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் நடித்தும் கொண்டிருந்தவன்,, பின்னர் எனது மன்றத்தை குலைத்து விட்டு மதிவதனனின் நாமகள் நாடக மன்றத்தில் சிறிது காலம்…அப்போது தான் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்.
.திரு கணேசபிள்ளை அவர்கள் என்னை போக்குவரத்தில் கண்டும் உள்ளார்..இது 1969 ம் ஆண்டு..எனது அப்போதைய தோற்றம் ஒரு திமிர் பிடித்தவன் அவர் கண்ணில் பட்டுள்ளது….அதேநேரம் நான் ஒரு சினிமா நடிகனும் கூட..என்னிடம் சிறு திமிரும் 
இருக்கத்தான் செய்தது…எனது வீட்டுக்கு வந்தனர்..நன்றாக பேசினார்..சிறுது காலத்துக்கு முன்னர் தான் எனது நண்பன் ராஜகோபால் அவரிடம் இருந்து பிரிந்தார்…வந்தவர் சும்மா இருக்காமல் ஒரு நடிகன் வேணும் அது ராஜகோபால் மாதிரி பெரிய நடிகர் தேவை
 இல்லை என…வந்தது வில்லங்கம்.. தேநீர் போட சென்ற எனது மனைவி என்னை அடுக்களைக்கு அழைத்தார்…. கேட்டார் அது சரி நீங்க அவர் நாடகத்தில் நடிக்க போகிறீரா.. அவர் பெரிய நடிகர் வேண்டாம் என்கிறார் என..நான் சொன்னேன் எனக்கு இங்கு 
அறிமுகம் வேண்டும் நான் நடிக்கிறேன் என,,, உடனே சொன்னா போறது சரி அவர் சொல்வது மாதிரி எண்டால் நான் இனி சாப்பாடு போட மாட்டேன் என…ஒத்திகைக்கு சென்றேன்… நாடகம்… கே.கே.மதிவதனன். எழுதிய ..பித்தலாட்டம்.. எனக்கு ஜோடியாக 
..பிரியா ஜெயந்தி ..நான் வரும் ஒவொரு காட்சியும் ரசிகர்கள் ஆரவாரம்…முன் ஆசனத்தில் இருந்த எனது மனைவியும் ரசித்தாள்,,, அன்று தொடங்கிய எமது நடப்பு..சகோதர மனப்பான்மை 
அவர் இறக்கும் வரை மாறவில்லை எம்மிடம்…அவர் எழுதும் போதும் மிக முக்கிய கதாபாத்திரங்களையே எனக்காக எழுதுவார்.. கைராசியாக முதல் காட்சியில் நான் இப்படி..சதுரங்கம்..கருப்பும்
 சிவப்பும்.. ஸ்புட்னிக் சுருட்டு ..புளுகர் பொன்னையா..சண்டியன் சின்னதம்பி ..நம்பிக்கை..ஆசை மச்சான்.அசட்டு மாப்பிள்ளை என…மிகுதி தொட ரும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.