வெள்ளி, 21 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…4

தொடர்ந்தும் ..புளுகர் பொன்னையாவே……நாடகங்களை மண்டபங்களில் நடத்தும் போது பிரச்சனைகள் குறைவு.நேரத்திற்கு தொடங்கி நேரத்திற்கு முடிந்து விடும்.. வெளியிடங்களுக்கு சென்று பரந்த வெளிகளில் நடாத்தும் போதும்.. வெளியூர்களில் நடாத்தும் போதும் பல புது அனுபவங்கள்…
திரு.வேலணை வீரசிங்கம் அண்ணனுக்கு இந்த நாடகத்தை தன சொந்த ஊரான வேலணையில் மேடையேற்ற வேண்டும் என்ற ஆவல்.செயலில் இறங்கி.. வேலணை மகா வித்தியாலயத்தில் நாடகம்..ஒப்பனை தொடங்கிவிட்டது..நேரம் 7.30 க்கு மேல்..திடீரென கே.எஸ்.பாலச்சந்திரன் மயங்கி விட்டார்..என்ன நடந்தது ,எல்லோரும் கலங்கி என்ன செய்வதென்றறியாத நிலையில் ,அவராலும் தன்னிலை சொல்லமுடியா நிலை..எல்லோரும் பதறியபடி..அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. கிட்டிய மருத்துவமனை..ஊர்காவற் துறை ..மகாவித்தியாலம் மைதானம் மக்கள் கூட்டம்.. செய்வதறியாது அவரை காரில் தூக்கி சென்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்…வலி நெடுக மக்கள் நாடகம் பார்க்க வந்து கொண்டிருந்தனர்..இதற்குள் வைத்தியசால சென்று விட்டோம்.. பரிசோதனை செய்த வைத்தியர்,,கேர்னியா என்றார்.. அவருக்கு ஆபரேசன் செய்யவேண்டும் என்றார்..எங்களுக்கு செய்வதறியா நிலை..நாங்கள் மன்றாடினோம்..பின்னர் சொன்னார் ஒரு ஊசி ஒன்று போடுகிறேன் ..அது கூட ஒரு மூன்று மணித்தியாலம் தான்.வலி இல்லாமல் இருக்கும் ,ஆனால் நாடகம் நடிக்க முடியுமோ தெரியாதென்று…திரும்பவும் நாடகம் நடைபெறும் மைதானம் வந்து விட்டோம்..என்ன செய்வது..நாடகம் நடத்துவதா விடுவதா என்ற நிலை.. நிலைமையை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தோம்.. இதற்குள் பாலா.. அண்ணை நான் ரெடி.. சொல்லுங்கோ நாடகம் நடக்கும் என்று…மைதானம் விசில் சத்தத்தால் கும்மாளம் இட்டது..நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது கடைசி பத்து நிமிடம் இருக்கும் போது மீண்டும் அவருக்கு வருத்தம்.மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம்…தவிர்க்க முடியாத நிலையில் ..பாலா இல்லாமல் கடைசி காட்சி..இதில் பாலச்சந்திரன் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர்..தம்பையா… நான் பொன்னையா அண்ணை எங்கை தம்பையனை காணேல்ல ஒன்டாதானே திரிவீங்க என்று…. அதற்க்கு பொன்னையா .. டேய் அவனுக்கு சுகமில்லை ஆள் இப்ப ஆசஸ்ப்பதிரியைல போய் பாக்க வேணும் என்று..இதற்கும் புரிந்த ரசிகர்கள் சிரித்தனர்…உடனே வீரசிங்கம் அண்ணர் மிகுந்த வருத்தத்துடன் ஒரு அறிவித்தலை மக்களுக்கு அறிவித்தார்… மீண்டும் இந்த நாடகம் இங்கே போடுவோம்,,,நீங்கள் கையி வைத்திருக்கும் இந்த டிக்கட் காணும் என்று.. மக்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்…மூன்று வாரங்களுக்கு பின்னர் இதே மைதானத்தில் நாடகத்துடன்… எ.ஈ.மனோகரன்.. என்.இமானுவல்..மற்றும் பல பொப் இசைபாடகர்களுடன் மிக விமரிசையாக நடத்தி முடித்தார்.. நண்பர்.. அப்துல் ஹமீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..இந்த நாடகத்தை பார்க்க எனது மனைவியும் வந்திருந்தார்..நாடகம் முடிந்த பின்னர் தான் இசை நிகழ்ச்சி.. நான் மனைவியுடன் பேசுவதற்காக வந்தபோது தனக்கு தெரிந்தவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி ..சொன்னார் இப்பிடி இருங்கோ.. மேடையில ஆட போகவேண்டாம் என..ஆனால் எனது நண்பன்..இசையமைப்பாளர்..பாடகன்.என்.இமானுவேல்..என் சக உத்தியோகத்தன்,,என்னை அன்பாக அழைத்து இந்த பாடல் இங்கு நன்றாக வேண்டும்.. நான் பாடும்போது நீ ஆட வேண்டும் என
, நேரமும் வந்தது.. இமானுவேல் பாடதுடங்க
..நான் ஆடிக்கொண்டு மேடை வர.. நண்பர் அப்துல் ஹமீத் நாடகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை.சொல்லி ஆஹா கந்தப்பர் மேடையில் துள்ளிசைக்கு நடனமாட என… 
மக்கள் ஆரவாரம். அவர் பாடிய அந்த பாடல்….சித்திர கன்னிகள் ஊர்வலம் போகும் சிங்காரம் பார் என தொடங்கும்….அப்போது
 மேடையில் துள்ளிசைக்கு ஆடுபவர் யாழில் குறைவு,,நிகழ்ச்சி நடைபெறுவதும் குறைவு… 
எல்லோருக்கும் மகிழ்ச்சி வீடு செல்லும் வரை என் மனைவியின் முகத்தில் எரிச்சல்… வீடு சென்றதும்.. நான் அவளவு சொல்லியும்.. எனக்கு தெரிஞ்ச ஆக்கள் இருந்தவை.. என்று..இன்றும் இந்த வயதிலும் துள்ளிசை என்றால் என்
 கால்கள் சும்மா இராது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.