வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த அறிக் கையை ஜனாதிபதியிடம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கையளித்தார்.
வாகன சாரதிகளின் தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க கடந்த வரவு–செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்துத்துறையைச் சார்ந்த சிலர் இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியிட்டமையால் அது குறித்து ஆராய்ந்து, புதிய அபராதப்பத்திரத்தை தயாரிக்க ஜனாதிபதியால் குழுவொன்று
நியமிக்கப்பட்டது.
நிதி மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம், வாகனப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் இக் குழுவில்
உள்ளடங்குகின்றனர்.
இதனடிப்படையில் குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இவ் அறிக்கை யினை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் சோமவீர
மேலும் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக