சனி, 29 மே, 2021

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு

 

இலங்கையில் அறிமுகம்:கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன . எனவே
உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது. விண்ணப்ப முடிவுத்திகதி 2021.06. 28
கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?கிரம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari “village officer” எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள்
 திரட்டுதல், வாக்காளர்
பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது 
பொறுப்பாகும்.
வயதெல்லை என்ன? 21 வயதுக்குக் குறையாலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.கிராமசேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்.சம்பளத்திட்டமாக 28,940.00 – 10×300 – 11 x 350 -10 x 560 – 10 x 660 – ரூா 47,990.00 என்பதாகக் 
குறிப்பிடப்படுள்ளது.
ஆரம்ப சம்பளம் 28,940.00.வாழ்க்ைகச் செலவுக் கொடுப்பனவு 7800.00.வேறு கொடுப்பனவு 2500.00என 39,240 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். இதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.என 37,440 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும்.ஓய்வூதியத்துக்காக 
6% கழிக்கப்படும்.
கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்கைமைகள் என்ன?கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய பாடங்களுள் ஒரு பாடத்தினையும், கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில்
 சித்தியடைந்திருத்தல்.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல். பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்? எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்ப்படுவார்கள். ஒவ்வொருபிரதேச செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற
வௌ்ளிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்டுவார்கள். இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேர்முகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம்
 பெறுவார்கள்.
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு மொழிப் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக 
அமையும்.
இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு, புரிந்துகொள்ளுதல், எழுத்துரு அமைப்பு,
மொழியும் கட்டுரையும்,வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல், வழங்கப்பட்ட பந்தியொன்றை சுருக்குதல்.
வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், வாக்கியங்களசிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல்,
    Home
    இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! 2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு..! உடன் விண்ணப்பியுங்கள்..! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!!
இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! 2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு..! உடன் விண்ணப்பியுங்கள்..! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!!
செய்திகள்
வேலைவாய்ப்பு
May 29, 2021Leave a Comment on இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! 2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு..! உடன் விண்ணப்பியுங்கள்..! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!!   
Advertisement
அறிமுகம்:இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு 
விட்டன . எனவே
உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது. விண்ணப்ப முடிவுத்திகதி 2021.06. 28
கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari “village officer” எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள்
 திரட்டுதல், வாக்காளர்
பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது பொறுப்பாகும்.
வயதெல்லை என்ன? 21 வயதுக்குக் குறையாலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.கிராமசேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்.சம்பளத்திட்டமாக 28,940.00 – 10×300 – 11 x 350 -10 x 560 – 10 x 660 – ரூா 47,990.00 என்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.
Advertisement
ஆரம்ப சம்பளம் 28,940.00.வாழ்க்ைகச் செலவுக் கொடுப்பனவு 7800.00.வேறு கொடுப்பனவு 2500.00என 39,240 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். இதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.என 37,440 மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும்.ஓய்வூதியத்துக்காக
 6% கழிக்கப்படும்.
கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்கைமைகள் என்ன?கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய பாடங்களுள் ஒரு பாடத்தினையும், கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் 
சித்தியடைந்திருத்தல்.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல். பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது 
போதுமானது.
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்? எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்ப்படுவார்கள். ஒவ்வொருபிரதேச செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற
வௌ்ளிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்டுவார்கள். இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேர்முகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம் பெறுவார்கள்.
Advertisement
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு மொழிப் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக 
அமையும்.
இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு, புரிந்துகொள்ளுதல், எழுத்துரு அமைப்பு,
மொழியும் கட்டுரையும்,வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல், வழங்கப்பட்ட பந்தியொன்றை சுருக்குதல்.
வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், வாக்கியங்களசிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் 
எழுதுதல்,
இலகுவான இலக்கணப் பயன்பாடுகுறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும். 1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.பொதுஅறிவும் பொது உளசார்பும்; விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தள் 
வழங்கப்படும்.
இவ்வினாப்பத்திரம் மூலம் நாட்டின் வரலாறு, பூகோல, சமூக பொருளாதார ரீதியில் முக்கியமான தகவல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாடடு சமகாலத் தகவல்கள் பற்றிய பொது அறிவு,எண்கணிப்பு, தர்க்கிக்கும் சக்தி,
பிரச்சினைகளைத் தீர்த்தல், தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் உட்பட பொது அறிவை அளவிடும் வகையில் தயாரிக்கப்படும் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும் மாதிரியிலான வினாக்ககளைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடை 
அளித்தல் வேண்டும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

வெள்ளி, 28 மே, 2021

இது தங்கத்தை விட மதிப்புமிக்கதாம். எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்

 இன்று நீங்கள் பார்க்க போவது தங்கத்தை விட மதிப்பான ஒரு பொருளை பற்றித்தான்.. அதாவது அந்த செடியின் மூலம் அவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதுதான் பொருள் சரி வாருங்கள் அதுபற்றிய குறிப்பை
 பார்க்கலாம்
தங்கத்தை விட மதிப்புமிக்கது எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா அழகா இன்னொரு பூ இருக்கும். அது ‘டேபிள் ரோஸ்’. ‘பட்டன் ரோஸ்’னும்
 சொல்வாங்களோ…
    தங்கத்தை விட மதிப்புமிக்கதாம்..!! எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்..!
தங்கத்தை விட மதிப்புமிக்கதாம்..!! எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்..!
மருத்துவம்
May 22, 2021Leave a Comment on தங்கத்தை விட மதிப்புமிக்கதாம்..!! எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு 
கொண்டு வாருங்கள்..!   

இன்று நீங்கள் பார்க்க போவது தங்கத்தை விட மதிப்பான ஒரு பொருளை பற்றித்தான்.. அதாவது அந்த செடியின் மூலம் அவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதுதான் பொருள் சரி வாருங்கள் அதுபற்றிய 
குறிப்பை பார்க்கலாம்
தங்கத்தை விட மதிப்புமிக்கது எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா அழகா இன்னொரு பூ இருக்கும். அது ‘டேபிள் ரோஸ்’. ‘பட்டன் ரோஸ்’னும் 
சொல்வாங்களோ…
இந்த டேபிள் ரோஸ் கடையில் கிடைக்காது. எப்போ எங்க கிடைக்கும்னும் சொல்ல முடியாது.அவ்வளவு பலன்களை தரக்கூடிய இந்த செடியை பற்றி தான் பார்க்க போகிறோம்.


நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 27 மே, 2021

நாட்டில் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்.

 
 
கொரோனா covid-19 காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று(22) முதல் திறக்கப்படவுள்ளதாக பல்கலைகழ மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

புதன், 26 மே, 2021

காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி, கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். 

 காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில்  சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதையடுத்து, அந்த பகுதியினை முடக்குவதற்கு விண்ணப்பமானது, சுகாதாரப் பிரிவினரால் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 மேலும், குறித்த விண்ணப்பம் அரசாங்க அதிபரினால் சிபார்சு செய்யப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 25 மே, 2021

குறைந்தளவிலான ஊழியர்களுடன் சிறிலங்கா அரச அலுவலகங்கள் இன்று திறக்கப்படும்

 


இன்றைய தினம் அரச அலுவலகங்கள் திறக்கப்படும். எனினும் இவற்றுக்கு இயன்றளவு குறைந்தளவிலான ஊழியர்களையே சேவையில் ஈடுபடுத்துமாறு அலுவலக பிரதானிகளிடம் கேட்டுக் 
கொள்கின்றோம்.
 போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதாவது ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் 
அறிவித்துள்ளது
 "மனித உரிமை பேரவையில்ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி  தெரிவிப்பு"    மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி 31 ஆம் திகதி வரை விமானத்தினூடாக எந்தவொரு பிரஜைகளும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டுமா என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.   இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , நடமாடும்
 சேவைக்கு அனுமதி
 விவசாய உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நடமாடும் சேவையில் ஈடுபட முடியும். அத்தோடு ஏற்றுமதி தொழிலாளர்களும் அவர்களின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும்.
 பேலியகொட சந்தை
 பேலியகொட சந்தை நாளைமறுதினம்  26 , 27 மற்றும் 28 ஆகிய 3 தினங்களிலும் திறக்கப்பட மாட்டாது. வெசாக் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் எடுக்கப்படும் தீர்மானமே இம்முறையும் எடுக்கப்பட்டுள்ளது.
 மதுபானசாலைகள்
 அத்தோடு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜூன் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று 
குறிப்பிட்டார்.
 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகையில் ,
 பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு ஜனாதிபதி செலணியின் ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
 அதற்கமைய கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரைக்கமைய ஒரு பிரதேசத்தில் இரு சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தினூடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
 விமான நிலையங்கள்
 ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமைக்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை எந்தவொரு பயணிகளும் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. இந்த கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அரச அலுவலகங்கள்
 நாளைய தினம் அரச அலுவலகங்கள் திறக்கப்படும். 
எனினும் இவற்றுக்கு இயன்றளவு குறைந்தளவிலான ஊழியர்களையே சேவையில் ஈடுபடுத்துமாறு அலுவலக பிரதானிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

வெள்ளி, 21 மே, 2021

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் பற்றிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை 
அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரதமர் மோடி, மாநில அரசுகளின் அதிகாரிகள், ஆட்சியர்கள், 
மாநகர ஆணையாளர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய ஆலோசனையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் 
வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்சி 
ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ரேபரிலியில், வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனால் தொற்று பரவல் கடுமையாக சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பீகாரில் ஹிட் கோவிட் என்ற செயலி மூலம் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை 
தெரிவித்துள்ளது. 
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறாக ஒவ்வொரு மாநிலமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக சில வழிமுறைகளை கையாள்கின்றன. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பயணிக்க ஆம்புலன்ஸ் வசதி போதாமை இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நோயாளிகள் பலர் எளிதாக மருத்துவமனைகளை சென்றடைகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>>>





புதன், 19 மே, 2021

நுணுவில் குளக்கட்டு ஆலயத்திலிருந்து திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையில் மீட்ப்பு


யாழ் நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை பிரித்து உள் இறங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கோயில் நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு   காவல்துறையினர்தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்திலிருந்து திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும் கோபுரக் கலசம் ஒன்று வெட்டப்பட்ட நிலையிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கடந்த 9ஆம் திகதி கூரை பிரித்து உள் இறங்கிய திருட்டுக் கும்பல் ஒன்று அங்கிருந்த நகைகள், பணம் மற்றும் கோபுரக் கலசங்களைத் 
திருடியிருந்தது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்தது. தாவடியைச் சேர்ந்த ஒருவர் கைது 
செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பண்டத்தரிப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை தொழிலகம் ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்திலிருந்து திருடிய 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும் கோபுரக் கலசம் ஒன்று வெட்டப்பட்ட நிலையிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் வேறு கொள்ளை மற்றும் திருட்டுக்களில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் நிறைவில் அவர்கள் நெல்லியடி காவல் நிலையத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் கூறினர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 18 மே, 2021

பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நிகழ்வு

 

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து
 நிகழ்வை முன்னெடுத்தனர். பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த செல்வி பாபரா ராசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து
தமிழீழ தேசிய கொடியினை இம்ரான் படையணி 
தளபதி மணியரசன் அவர்களின் துணைவியார் ஆரபி ஏற்றி வைத்தார்கள் . முன்னாள் போராளி சாவித்திரி அவர்கள் நினைவு தூபிக்கான மலர் மாலையினை 
அணிவித்தார்கள்.
தொடர்ந்து எழுச்சி நடனம் , கவிதை மற்றும் உரையினை தொடர்ந்து உணவு தவிரப்பு நிகழ்வில் கலந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கி உணவு தவிர்ப்பை நிறைவு செய்ததை தொடர்ந்து தேசிய கொடிகள் கையேந்த பட்டு ,தமிழீழம் எனும் இலக்கு அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 14 மே, 2021

நாட்டில் மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது. 13-05-2021.அன்றிரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா  
அதிபருமானஅஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என்றும் எனினும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார் தனிமைப்படுத்தல் அல்லது பயண விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் , நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், மீறுவோருக்கு எதிராக, 6 வருடங்கள் தொடர் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 10ஆயிரம் ரூபாய் தண்டம் இன்றேல், இரண்டும் ஒரேதடவையில் விதிக்கப்படலாம் எனவும் கூறினார்.
எனினும் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் எனவும், வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். இதேவேளை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 13 மே, 2021

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கோவிட் தொற்றை காரணம் காட்டி நிகழ்வை தடுக்கும் அரசு


 நாட்டில் எமது மக்களை கொன்ற அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது  உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள .13-05-2021.இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உரிமை போரின் போது யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் நினைவு கூர்ந்து உறவினர்கள் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளுவது வழமை.
ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் யுத்தத்தை வழி நடுத்தி எமது மக்களை கொன்ற அரசாங்கம் தற்போது ஆட்சியில் 
இருக்கின்றது.
அந்த அரசாங்கம் தமிழ் மக்களை முற்று முழுதாக அடக்கி இலங்கையில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக ஒரு பதிவுகள் இருக்கக் கூடாது என்ற வகையில் நீண்ட கால திட்டத்தில் செயல் பட்டு
 வருகின்றது.
அந்த வகையில் தற்போது எதிர் வரும் 18 ஆம் திகதி (மே 18) யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு
 வருகின்றது.
நேற்று இரவு மத குருக்கல் நினைவு கல் ஒன்றை அப்பகுதிக்கு கொ
ண்டு சென்ற போது இராணுவம் குவிக்கப்பட்டதோடு, அங்கு சென்றவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ளும் பகுதியில் உள்ள தீபம் ஏற்றும் கல்லினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மிகவும் ஒரு அராஜகமாக இனத்தின் ஒரு மனதை மிகவும் நோகடிக்கக் கூடிய ஒரு செயல்பாட்டில் தற்போதைய அரசாங்கமும், பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கைகளை வண்மையாக கண்டிக்கின்றோம்.சர்வதேச விழுமியங்களுக்கு அப்பாற் பட்ட வகையில் இந்த செயல் பாடுகள் இடம் பெற்று வருகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக உடனடியாக குறித்த விடயங்களை சர்வதேச ரீதியில், சர்வதேச நாடுகளிடம் முறையிடக்கூடிய சூழ்நிலைகள் இல்லை.
எனினும் அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம். தொடர்ச்சியாக எமது மக்களை அடக்கு முறைகளுடன் ஆழ நினைப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

செவ்வாய், 11 மே, 2021

திருட்டில் தொடர்புடையவர்கள் கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது

யாழில் ஆள்ளில்லா வீட்டில் நீண்ட நாட்களாக கொள்ளையிட்டு வந்த 8 பேர் இரவோடு இரவாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 7 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் வீட்டை உறவினர் ஒருவர் பராமரித்து வந்த நிலையில் அங்கு அடிக்கடி திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் யாழ். காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் உப காவல் துறை  பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 
கைது இடம்பெற்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 10 மே, 2021

வடக்கில் கொரோனாவின் தீவிர நிலையை சமாளிக்க முன்னேற்பாடுகள்

 வடக்கில் தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
10-05-2021. இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. . தற்போது நாடு பூராகவும் ஏற்பட்டு வரும் தீவிர கொரோனா நிலையினை எதிர்கொள்வதற்காக வடக்கு மாகாணத்திலும்
 சுகாதாரப் பிரிவினரால் பல்வேறுபட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 அந்த வகையில் முதல் கட்டமாக வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருகின்றோம். இந்த நிலையங்களில் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள். 
 ;வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற சிகிச்சை நிலையங்களை தவிர மேலதிகமாக கிளிநொச்சியில் பாரதி புரத்திலும் அதைப்போல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியிலும் புதிதாக சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அவை இயங்க ஆரம்பித்துள்ளன. 
 தற்போது இனங்காணப்படும் நோயாளர்கள் நோய் அறிகுறியுடன் இனங்காணப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. 
 ;குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படுகின்ற 
நிலைமையைப் பொறுத்து நாங்கள் இந்த கருத்தினை வெளியிடுகின்றோம் அத்துடன் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு
 ஒக்சிஜன் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது 
அவதானிக்கப்பட்டுள்ளது.
 சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையும் அவதானிக்கப்பட்டுள்ளது அந்த வகையிலே வடக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியில் வைத்தியசாலைகளை அதற்கு ஏற்றவாறு 
தயார்ப் படுத்தியுள்ளோம். 
 வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையில் ஒரு விடுதியினை இதற்கு ஏற்றவாறு தயார்படுத்தியுள்ளோம். அதாவது ஆண்களுக்கு ஒரு விடுதி பெண்களுக்கு ஒரு விடுதி என வடக்கு மாகாணத்தில் இந்த ஏற்பாட்டினை 
ஏற்படுத்தியுள்ளோம். 
 நோய் அறிகுறியுடன் இனங்காணப்படும் தொற்றாளர்களை சிகிச்சை அளிக்க ஒக்சிஜன் தேவை படுவோர் மற்றும் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட வேண்டிய வர்களுக்காகவே இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம் அதேபோல தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மாரை பராமரிக்கவென மாவட்டம் தோறும் அதற்கு தனியான ஒரு விடுதியினை சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம். பிரசவ அறையுடன் கூடியதாக அந்த விடுதி தயார்படுத்தப்பட்டுள்ளது. 
 குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் அந்த விடுதி விஷேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது அதேபோல ஏனைய மாவட்டங்களிலும் ஒரு விடுதி 
ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் 
தெரிவித்தார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 6 மே, 2021

வவுனியாவில் 30 பவுண் தங்க நகை கொள்ளை - மூவர் கைது

 வவுனியாவில் கடந்த வாரம் காவல் துறை  என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா காவல் துறைாயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல் துறை என 
கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் காவல் துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா காவல் துறை06-05-2021. இன்று 
கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற காவல் துறை உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது
 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

புதன், 5 மே, 2021

யாழில் முகக் கவசம் அணியாதவர்களை காவல் துறையினரால் கைது

 


யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை காவல் துறையினர்  
கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நகர் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல் துறை  நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

கிழக்கில் ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்ற உத்தரவு


கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள
ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.சிறீதருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவேலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத 
வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட
 வைத்தியசாலையில் 30 பேருக்கும், அம்பாறை, வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத தை;தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்
தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை 7எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் - 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே  நேற்று (04) செவ்வாய்க்கிழமை வழங்கியிருந்தார்.
இதனையடுத்தே, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

திங்கள், 3 மே, 2021

இலங்கையின் இளம்புயல்.அறிமுக போட்டியில் அசத்தி.பங்களாதேஷை வீழ்த்தியது

இலங்கை.  22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம அறிமுக ஆட்டத்திலேயே 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க, பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
வெற்றி… ஒரேயொரு வெற்றி அது சிம்பாவே என்றால் கூட பரவாயில்லை என இலங்கை கிரிக்கெட் அங்கலாய்த்துக் கொண்டிருந்த தருணத்தில், ஒரு டெஸ்ட் வெற்றியை இலங்கை பதிவு 
செய்துள்ளது.
காலை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட்டை வெற்றியீட்டி, தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது.
437 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய பங்களாதேஷ் 227 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது,ஜெயவிக்ரம இரண்டாவது இன்னிங்ஸில் 5/86 என பந்து வீச்சில் கலக்கினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் 6 விக்கெட் வீழ்த்தினார். 11/178 என அறிமுக போட்டியொன்றில் இலங்கை வீரரின் சிறந்த பந்துவீச்சு சொதனையும் அவர்
 வசமானது.
மற்றொரு முனையில் நெருக்கடி கொடுத்த ரமேஷ் மெண்டிஸ் 103 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.பங்களாதேஷ் தரப்பில் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் 
எடுத்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 1 மே, 2021

உழைப்பாளர் தினம் உருவான வரலாறும் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்



உழைப்பாளர் திம் உருவான வரலாறு
 மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான்… தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் 
எண்ணிலடங்காதது…
அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் பல்வேறு வலிகளை தாண்டி உரிமைகளை பெற்ற வரலாற்றினை தான் நாம் காண
 இருக்கிறோம்…  
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே 
எழத் துவங்கியது…
இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் அதில் முக்கிய கோரிக்கை வேலை நேர குறைப்பாக 
இருந்தது.
இதேப்போல் 1830 களில் பிரான்சில் நெசவுத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்தும் தொழிலாளர்கள் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்ப்பை
 வெளிப்படுத்தினர்.
இப்படி ஆஸ்திரேலியா,ரஷ்யா, அமெரிக்கா, என பல நாடுகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராட்டங்கள் வலுத்தன…
1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள் முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை 
முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியையும் கண்டனர்.
இது தொழிலாளி வர்க்க போராட்டத்தில் மிகப்பெரிய
 மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து பல கட்டப்போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடுல மே,1 1886 ஆம் ஆண்டு அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
இப்படி இருக்க கடந்த 1886-ம் ஆண்டு மே மதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு மகத்தான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர்
 தாக்கப்பட்டனர்.
இப்படி தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக
 அனுசரிக்கப்பட்டது.
1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும் சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் 
விடுக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 – உழைப்பவர் தினமாக 
நம்முன் நிற்கிறது.
இப்படி பல தொழிலாளர்களின் உயிர்தியாகம் தான் நாம் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த உழைப்பாளர்கள் அனைவருக்கும் சர்வதேச  உழைப்பாளர் தினம்  உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.