வெள்ளி, 21 மே, 2021

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் பற்றிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை 
அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரதமர் மோடி, மாநில அரசுகளின் அதிகாரிகள், ஆட்சியர்கள், 
மாநகர ஆணையாளர்கள் உள்ளிட்டோருடன் நடத்திய ஆலோசனையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் 
வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்சி 
ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ரேபரிலியில், வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனால் தொற்று பரவல் கடுமையாக சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பீகாரில் ஹிட் கோவிட் என்ற செயலி மூலம் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை 
தெரிவித்துள்ளது. 
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறாக ஒவ்வொரு மாநிலமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக சில வழிமுறைகளை கையாள்கின்றன. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பயணிக்க ஆம்புலன்ஸ் வசதி போதாமை இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நோயாளிகள் பலர் எளிதாக மருத்துவமனைகளை சென்றடைகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.