யாழ் நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை பிரித்து உள் இறங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கோயில் நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர்தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்திலிருந்து திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும் கோபுரக் கலசம் ஒன்று வெட்டப்பட்ட நிலையிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கடந்த 9ஆம் திகதி கூரை பிரித்து உள் இறங்கிய திருட்டுக் கும்பல் ஒன்று அங்கிருந்த நகைகள், பணம் மற்றும் கோபுரக் கலசங்களைத்

திருடியிருந்தது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்தது. தாவடியைச் சேர்ந்த ஒருவர் கைது

செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பண்டத்தரிப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை தொழிலகம் ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்திலிருந்து திருடிய 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும் கோபுரக் கலசம் ஒன்று வெட்டப்பட்ட நிலையிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் வேறு கொள்ளை மற்றும் திருட்டுக்களில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் நிறைவில் அவர்கள் நெல்லியடி காவல் நிலையத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் கூறினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக