உழைப்பாளர் திம் உருவான வரலாறு
மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான்… தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம்
எண்ணிலடங்காதது…
அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் பல்வேறு வலிகளை தாண்டி உரிமைகளை பெற்ற வரலாற்றினை தான் நாம் காண
இருக்கிறோம்…
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே
எழத் துவங்கியது…
இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் அதில் முக்கிய கோரிக்கை வேலை நேர குறைப்பாக
இருந்தது.
இதேப்போல் 1830 களில் பிரான்சில் நெசவுத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்தும் தொழிலாளர்கள் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்ப்பை
வெளிப்படுத்தினர்.
இப்படி ஆஸ்திரேலியா,ரஷ்யா, அமெரிக்கா, என பல நாடுகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராட்டங்கள் வலுத்தன…
1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள் முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை
முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியையும் கண்டனர்.
இது தொழிலாளி வர்க்க போராட்டத்தில் மிகப்பெரிய
மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து பல கட்டப்போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடுல மே,1 1886 ஆம் ஆண்டு அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
இப்படி இருக்க கடந்த 1886-ம் ஆண்டு மே மதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு மகத்தான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர்
தாக்கப்பட்டனர்.
இப்படி தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக
அனுசரிக்கப்பட்டது.
1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும் சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல்
விடுக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 – உழைப்பவர் தினமாக
நம்முன் நிற்கிறது.
இப்படி பல தொழிலாளர்களின் உயிர்தியாகம் தான் நாம் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த உழைப்பாளர்கள் அனைவருக்கும் சர்வதேச உழைப்பாளர் தினம் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக