செவ்வாய், 25 மே, 2021

குறைந்தளவிலான ஊழியர்களுடன் சிறிலங்கா அரச அலுவலகங்கள் இன்று திறக்கப்படும்

 


இன்றைய தினம் அரச அலுவலகங்கள் திறக்கப்படும். எனினும் இவற்றுக்கு இயன்றளவு குறைந்தளவிலான ஊழியர்களையே சேவையில் ஈடுபடுத்துமாறு அலுவலக பிரதானிகளிடம் கேட்டுக் 
கொள்கின்றோம்.
 போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதாவது ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் 
அறிவித்துள்ளது
 "மனித உரிமை பேரவையில்ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி  தெரிவிப்பு"    மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி 31 ஆம் திகதி வரை விமானத்தினூடாக எந்தவொரு பிரஜைகளும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டுமா என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.   இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , நடமாடும்
 சேவைக்கு அனுமதி
 விவசாய உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நடமாடும் சேவையில் ஈடுபட முடியும். அத்தோடு ஏற்றுமதி தொழிலாளர்களும் அவர்களின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும்.
 பேலியகொட சந்தை
 பேலியகொட சந்தை நாளைமறுதினம்  26 , 27 மற்றும் 28 ஆகிய 3 தினங்களிலும் திறக்கப்பட மாட்டாது. வெசாக் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் எடுக்கப்படும் தீர்மானமே இம்முறையும் எடுக்கப்பட்டுள்ளது.
 மதுபானசாலைகள்
 அத்தோடு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜூன் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று 
குறிப்பிட்டார்.
 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகையில் ,
 பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு ஜனாதிபதி செலணியின் ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
 அதற்கமைய கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரைக்கமைய ஒரு பிரதேசத்தில் இரு சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தினூடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
 விமான நிலையங்கள்
 ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டமைக்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை எந்தவொரு பயணிகளும் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. இந்த கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அரச அலுவலகங்கள்
 நாளைய தினம் அரச அலுவலகங்கள் திறக்கப்படும். 
எனினும் இவற்றுக்கு இயன்றளவு குறைந்தளவிலான ஊழியர்களையே சேவையில் ஈடுபடுத்துமாறு அலுவலக பிரதானிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.