செவ்வாய், 18 மே, 2021

பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நிகழ்வு

 

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து
 நிகழ்வை முன்னெடுத்தனர். பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த செல்வி பாபரா ராசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து
தமிழீழ தேசிய கொடியினை இம்ரான் படையணி 
தளபதி மணியரசன் அவர்களின் துணைவியார் ஆரபி ஏற்றி வைத்தார்கள் . முன்னாள் போராளி சாவித்திரி அவர்கள் நினைவு தூபிக்கான மலர் மாலையினை 
அணிவித்தார்கள்.
தொடர்ந்து எழுச்சி நடனம் , கவிதை மற்றும் உரையினை தொடர்ந்து உணவு தவிரப்பு நிகழ்வில் கலந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கி உணவு தவிர்ப்பை நிறைவு செய்ததை தொடர்ந்து தேசிய கொடிகள் கையேந்த பட்டு ,தமிழீழம் எனும் இலக்கு அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.