வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2026

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கனடா - பிரதமர் மார்க் கார்னி

இன்று கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது. 

புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவு 
கூருகிறோம். 
இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது. 
நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம். அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. 
இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும் 2026ம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம். புத்தாண்டு நல்வாழ்த்துகள் கனடா என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





.



 

வெள்ளி, 26 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசேந்திரம் றிசிகீர்த்தன் 26.12.2025

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட செல்வன் இராசேந்திரம்  றிசிகீர்த்தன்  அவர்களின் பிறந்தநாள் 26.12.2025.இன்று இவர்  இராசேந்திரம் தம்பதிகளின் புதல்வனும் ஆவர் தனது பிறந்தநாளை குடும்ப 
உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மாஅன்பு   சகோதரிகள்  சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  புத்தூர்  அம்மன் நவற்கிரி அம்மன் 

 சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்  இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.











வியாழன், 25 டிசம்பர், 2025

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

இணைய உறவுகள் மற்றும் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்  வாழ்த்துக்கள் 
இன்று, நாம் அனைவரும் ஒற்றுமையாகவும்  சந்தோசமாகவும் நத்தார் தினம்  ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளதாகும்  .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


 

சனி, 4 நவம்பர், 2023

திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி( ஜெயா )தம்மதிகளின் .செல்வி.பெனற் டிலக்சியா அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெறுள்ளார்

யாழ் .நவற்கிரியை சேர்ந்த  திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி( ஜெயா )தம்மதிகளின் .செல்வி.பெனற் டிலக்சியா  அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில்
 தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4  இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு
 பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு
 வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள். 
யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி செல்வி.பெனற் டிலக்சியா
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4  இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார் 
இவருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.



வெள்ளி, 14 ஜனவரி, 2022

அனைவர்க்கும் என் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்.14.01.2022

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தமிழர் திருநாளாம் தைத்திருநாள் 
நல் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளான14-01-2022.இன்று
தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக
அனைவர் வாழ்விலும் நிம்மதி
நிலைக்கட்டும்.
பொங்கலோ பொங்கல்
வாழ்க தமிழ் தழரால்...!
கடவுளே துணை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
எமது நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்.
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





சனி, 1 ஜனவரி, 2022

உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புதுவருட நல் வாழ்த்துக்கள்.01.01.2022

 

 உலக வாழ் அனைத்து மக்களுக்கும் அன்பர்த வணக்கம் உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும
அவர்களது குடும்பத்தினர் மற்றும் உலக மக்களுக்குஎமது இந்த இணையங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
.மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செலவங்கள் வளரட்டும் தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் 
மலர்கின்ற புதுவருடம் உலகெங்கும் வசிக்கும் மக்கள் நோயின்றி வாழவும், அனைவரின் வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்…
அனைவருக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
எமது நவக்கிரி.கொம்
நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களின் இனிய ஆங்கிலப்புது வருட 
நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





சனி, 25 டிசம்பர், 2021

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும்  அன்பர்த வணக்கம்   உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது நவக்கிரி.கொம்
 நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 15 அக்டோபர், 2021

கோண்டாவில் நாதஸ்வர வித்துவான் திரு பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவபடுத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்து தமிழரை நெகிழவைத்த இசையமைப்பாளர் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற 
நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ் இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.
குறித்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக குமரனை டி.இமான் அழைத்து பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் இலங்கை தமிழர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கோண்டாவில் நாதஸ்வர வித்துவான் திரு பஞ்சமூர்த்தி குமரனுக்கு 
என் இணையம்சார்பாக நல்வத்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 1 மே, 2021

உழைப்பாளர் தினம் உருவான வரலாறும் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்



உழைப்பாளர் திம் உருவான வரலாறு
 மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான்… தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் 
எண்ணிலடங்காதது…
அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் பல்வேறு வலிகளை தாண்டி உரிமைகளை பெற்ற வரலாற்றினை தான் நாம் காண
 இருக்கிறோம்…  
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே 
எழத் துவங்கியது…
இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் அதில் முக்கிய கோரிக்கை வேலை நேர குறைப்பாக 
இருந்தது.
இதேப்போல் 1830 களில் பிரான்சில் நெசவுத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்தும் தொழிலாளர்கள் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்ப்பை
 வெளிப்படுத்தினர்.
இப்படி ஆஸ்திரேலியா,ரஷ்யா, அமெரிக்கா, என பல நாடுகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராட்டங்கள் வலுத்தன…
1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள் முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை 
முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியையும் கண்டனர்.
இது தொழிலாளி வர்க்க போராட்டத்தில் மிகப்பெரிய
 மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து பல கட்டப்போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடுல மே,1 1886 ஆம் ஆண்டு அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
இப்படி இருக்க கடந்த 1886-ம் ஆண்டு மே மதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு மகத்தான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர்
 தாக்கப்பட்டனர்.
இப்படி தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டியிருந்தது. தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக
 அனுசரிக்கப்பட்டது.
1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும் சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் 
விடுக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 – உழைப்பவர் தினமாக 
நம்முன் நிற்கிறது.
இப்படி பல தொழிலாளர்களின் உயிர்தியாகம் தான் நாம் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த உழைப்பாளர்கள் அனைவருக்கும் சர்வதேச  உழைப்பாளர் தினம்  உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 14 ஜனவரி, 2021

உங்கள் அனைவர்க்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.14.01.21

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள்  முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளாம்14-01-2021.இன்று  தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் 
 நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக 
வாழ்க்கை வளம் பெற
வாழ்த்திப்பாடும்
சொற்களெல்லாம்
வந்து கேட்கும்
உங்கள் வாசல்
கதவு தட்டிடவே
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 1 ஜனவரி, 2021

இணைய வாசகர்களுக்கு ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள் 01.01.21

உலகம் முழுவதும்.01.01. 2021. உதயமாகும் புத்தாண்டு கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 01.01.2021.இன்று புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்பு
உறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும்என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி , மன அமைதி , மன திருப்தி , நிலைத்து நின்றிடவும் புதிய நண்பர்கள் , புதிய 
உறவுகள் சேர்ந்திடவும் , ஒற்றுமை ஓங்கிடவும் , ஒருமித்தக் கருத்து நிலவிடவும் , மனச்சோர்வு நீங்கி 
உத்வேகத்துடன் , வீரமும் விவேகமும் விளந்திடவும் , வரும் காலம் இனிதாக கழிந்திடவும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் . உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக 
நன்றி வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 25 டிசம்பர், 2020

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் 25.12.20

கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை
 கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது
 இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள் நவற்கிரி
 இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன





இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 26 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2018 தனது இல்லத்தில் வெகு
 சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 10 ஜூன், 2018

உலக கின்னஸ் சாதனை படைத்தார், திரு.அருணந்தி ஆரூரன்

திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் சாதனை படைத்தார்,
கர்நாடக சங்கீத கச்சேரியில் அதி கூடிய நேரம் 40 மணி நேரம் தொடர்ந்து பாடி, 29 மணி 40 நிமிட உலக கின்னஸ் சாதனையை
 முறியடித்து, தொடர்ந்து பாடி
திரு.அருணந்தி ஆரூரன், உலக கின்னஸ் 
சாதனை படைத்தார், என்பதில் இலங்கையராகநாம்  பெருமை
 கொள்வோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 2 மே, 2018

என்.வி. சிவநேசனுக்கும் அவர்பாரியாருக்கும் தமிழ்பண்டிதர் படட்டும் வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான
 பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம்
இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 28 ஏப்ரல், 2018

திரு-திருமதி என்.வி. சிவநேசன் அவர்களுக்கு தமிழ்பண்டிதர் படடம்

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி 
கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமதி நகுலா சிவநாதனுக்கு தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கப்பட்டது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில் வசிக்கும் திருமதி நகுலா சிவநாதன் அவர்களுக்குதமிழ்மாணி என்ற பட்டம் பெற்றுக்கொண்டார்.
25 வருட ஆசிரியர் சேவையைப் பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்கள்
தமிழ்மாணி என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்
செம்மொழியாம் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்கு கொடுக்கும்
உயர்ந்த இலக்கிற்காக கிடைத்த பரிசாகும் இவருக்காண இந்தச்சிறப்புத்தனை அனைவரும் வாழ்த்தி நிற்க  இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மானவர்கள் புரமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

யாழ் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இம்முறை 28 மாணவர்கள்.2017.ஆண்டின் . ஐந்தாம்தர புரமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் 13 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். அவ்வகையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளியான 155 மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சித்திடைந்த மாணவர்கள் :- 
நிர்மலன் றோகன் சன்சிகா - 177 புள்ளிகள்
நித்தியானந்தம் கிசாளினி - 161 புள்ளிகள்
சந்திரலிங்கம் பவிஸ்னன் - 160 புள்ளிகள்
பெற்றுள்ளனர் இவர்களை  
எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
.நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 






Blogger இயக்குவது.