புதன், 31 ஜனவரி, 2024

அமல்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் புதிய வேலை திட்டம்

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. 
குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. 
01-02-2024. தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை 
விடப்படுகிறது.
4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.
 தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில் சோதனை நடைமுறையாக 01-02-2024.அன்று முதல் இது அமல்படுத்தப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

செவ்வாய், 30 ஜனவரி, 2024

பிரித்தானிய நிபுணரின் துல்லியமான கணிப்பு மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்

மூன்றாம் உலகப்போர் எப்போது துவங்கும் யார் துவக்குவார்பக்கிங்காம் பல்கலைப் பேராசிரியரான Anthony Glees(75), புடின் மூன்றாம் உலகப்போரைத் துவக்கும் நாள் என ஒரு நாளை கணித்துள்ளார். 
அதாவது, ரஷ்யாவில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
ரஷ்யாவைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே புடின் வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறமுடியும்.
 ஆக, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் எனபேராசிரியர் ஆண்டனி கணித்துள்ளார் .என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 29 ஜனவரி, 2024

மு.க.ஸ்டாலினுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான இலங்கையர்கள் தொடர்பானா சிறீதரன் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த.11-11- 2022.அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை
 இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்று 
அனுப்பி வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையுமே 
இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சிவஞானம் சிறீதரன் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் அவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டியே சிறீதரன் கடிதம் 
அனுப்பிவைத்துள்ளார். 
குறித்த கடிதத்தில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
“32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச
 நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும்
 இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி 
சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என
 எதிர்பார்க்கிறேன்.
தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, 
முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை 
ஏற்படுத்தக்கூடிய 
சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது 
முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்க்க வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க 
ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை 
விடுத்துள்ளார்.
 தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின்
 உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் 
உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என சிவஞானம் சிறீதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 28 ஜனவரி, 2024

இன்று காலை நாடளாவிய ரீதியில் சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளார்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ்.28-01-2024. இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்த நடவடிக்கையின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 169 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 
இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 05 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு
 வருகின்றன. 
போதைக்கு அடிமையானவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 27 ஜனவரி, 2024

தேவாலயம் ஒன்று பிரான்ஸில் தீ விபத்துக்குள்ளானது

பிரான்ஸில் Viarmes (Val-d'Oise) நகரில் உள்ள தேவாலயம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
 Viarmes நகரின் பெயரையே கொண்டுள்ள குறித்த தேவாயலத்தின் மணிக்கூண்டு பகுதி பிற்பகல் 2 மணி அளவில் திடீரென 
தீப்பிடித்து எரிந்தது. 
திருத்தப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் எரியத்தொடங்கியுள்ளன.. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 
70 தீயணைப்பு படையினர் வரை இணைந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிய 
முடிகிறது. குறித்த தேவாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் திருத்தப்பணிகள் ஆரம்பித்திருத்து இடம்பெற்று வந்திருந்தமை
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 26 ஜனவரி, 2024

புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை ஒன்றிணைக்க வலியுறுத்தல்

சிறீதரன் சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை  ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 
 இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும் என்றும்  செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார்.
 இதேவேளை, முதற் தடவையாக கட்சி தலைவர் தெரிவில் மக்கள் ஆட்சி முறையின் வாயிலாக தெரிவு இடம்பெறுவதும் வெற்றி பெறுவதும்தான் கட்சி மற்றும் அமைப்புக்கள் சார்ந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தும், நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் வழியில் சென்று கட்சியை புத்தெழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் பணி அமையுமென்பதில் எனக்கு அசைக்கவியலாத நம்பிக்கை உண்டு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனபடுத்த வலியுறுத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு 
தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு
 அன்றிலிருந்து 
.இன்றுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் .
அதனடிப்படையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியபடுத்துகின்றோம்.
குறிப்பாகஇந்த இலங்கை தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறபட்டுகொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள் ,ஆனால் தமிழ் மக்களுக்கு 
இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் 
முன்னெடுக்கபடவில்லை.
அது வெறும் பேச்சுமட்டத்திலே மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருக்கின்றார்கள். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை .வடக்கு கிழக்கு 
பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,
சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் ,அனைத்து தொழிற்சங்களும் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த ஆதரவினை 
வழங்கவேண்டும்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது .24-01-2024..நேற்றைய தினம்கூட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. 
இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் 
இருக்கிறது.
இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு 
வருகின்றது.
இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையோ நிறுத்த போவதில்லை .
எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை. மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம் 
இன்றைய தினம்
 சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.
இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும். சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை 
பெற்று தருவதற்கு 
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ
 கிடையாது.
13இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ
 கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.
 எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும்.இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார்
என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 24 ஜனவரி, 2024

நாட்டில் நிறைவு செய்யப்பட்டது சீனி வரி தொடர்பான விசாரணை

நாட்டில் சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விசாரணையின் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்
 தெரிவித்துள்ளார். 
அதற்கான பதில்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மோசடி தொடர்பாக வழக்குத் தொடர்வதற்கான 
ஆலோசனையைப் பெறுவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 12 நிறுவனங்களில் தடயவியல் தணிக்கையை நடத்தி 6 நிறுவனங்களில் இருந்து பெற்ற 
இலாபத்தில் 31 கோடி ரூபாவை மீட்டுள்ளதாக இராஜாங்க 
அமைச்சர் தெரிவித்தார். 
சீனி வரி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 23 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

நாட்டின் கொள்கை ரீதியாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு
 விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றதும் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் மக்கள் நலனை கருத்திற் கொண்டு தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிறீதரன்
 குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டு, தற்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழரசு கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புத்துயிரூட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் 
வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 22 ஜனவரி, 2024

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

 

2024 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
 இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம்
 குறிப்பிட்டுள்ளது.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவு

திருகோணமலையில்.21-01-2024. இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் 
நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 இத்தேர்தலின் போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 
எண்ணிக்கை 321.என்பதாகும்
இவருடைய சேவை தொடர எனது இந்த இணையங்களின்
நல்  வாழ்த்துக்கள் உரித்தாகுக 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 20 ஜனவரி, 2024

பணக்கார குடும்பங்களின் பட்டியலில் உலகில் முதலிடத்தில் உள்ள UAE அதிபர்

உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி மதிப்பில் இந்த மாளிகை அமைந்துள்ளது.
இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர். இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன. இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும்
 8 ஜெட் விமானங்கள் உள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகுசாதன நிறுவனமான பென்டி, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என பிரபல நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.
அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். இதன் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் சதவீதம்
 உயர்ந்துள்ளது. 
இந்நிறுவனம் விவசாயம், எரிசக்தி, பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் வணிகங்களை செய்துவருகிறது. இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 19 ஜனவரி, 2024

இலங்கை தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் மற்மொரு கலந்துரையாடல்

இலங்கை தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
 உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில்19-01-2024. இன்று மற்றுமொரு கலந்துரையாடல் 
இடம்பெறவுள்ளது.
தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள தடைகள்
 குறித்து மேலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் என
 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் 50க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 18 ஜனவரி, 2024

நாட்டில் பல்கலை விரிவுரையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்.18-01-20924. இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில்
 ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின், விசேட கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் விசேட கொடுப்பனவு வழங்கு
வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று காலை முதல் ஒரு நாள் அடையாள 
வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தினால் நாடளாவிய ரீதியாக உள்ள 17 பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களுக்கு மாத்திரம் விசேட கொடுப்பனவு 
அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால், பல்கலைக்கழக கட்டமைப்பில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் கல்விசாரா ஊழியர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இன்றைய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் தங்களின் எதிர்ப்பினை காண்பித்தனர். 
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களும் இன்று பல்கலைக்கழக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில்
 ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் 
போது கல்வி
 சாரா ஊழியர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 
அதேநேரம், வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, தாதியர்கள் 17-01-2024.அன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணியுடன் 
நிறைவடைந்துள்ளது. 
தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் நேற்று ஸ்தம்பித்திருந்தமை  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 17 ஜனவரி, 2024

நாட்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மற்றுமொரு புத்தம் புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானப் பிரிவினருக்காக மற்றுமொரு புத்தம் புதிய A-330 -243 எயார்பஸ் ரக 
விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால்
 பெரேரா தெரிவித்தார்.
 பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
 இந்த விமானத்தில் 22 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 240 எகானமி வகுப்பு இருக்கைகள் உள்ளதாகவும், இரண்டு என்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த புதிய விமானத்தின் வருகையானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் விமான தாமதங்கள் மற்றும் இரத்துச் சம்பவங்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 16 ஜனவரி, 2024

சர்வதேச மாணவர் வருகைக்கு கனடாவில் கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு

கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை பூதாகரமாகிவரும் நிலையில், அதைக் காரணம் காட்டி, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச 
மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டுவருகிறது. கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது.
 எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பிவரும் நிலையில், வீடுகள் பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக, வீட்டு வாடகைகள்
 22 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. ஆகவே, நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று கூறியுள்ள
 புலம்பெயர்தல்
 துறை அமைச்சரான மார்க் மில்லர், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
 கனடாவுக்கு புலம்பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்கேற்ப வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியதுதானே என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால், வீடுகளைக் கட்டுவதற்கு ப
திலாக, மீண்டும் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்துள்ளது கனடா அரசு. விடயம் என்னவென்றால், கனடாவுக்கு சர்வதேச மாணவர்களால் பெரிய வருவாய் கிடைக்கிறது. 
கனேடிய மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தை விட, சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிக கல்விக்கட்டணம் செலுத்துகிறார்கள். ஆக, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் 
குறைப்பது 
கனடாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு என்று தெரிந்தும், ஏன் அமைச்சர்கள் மாணவர்களையே குறிவைக்கிறார்கள் என்று 
புரியவில்லை..என்பதகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 15 ஜனவரி, 2024

தலைமன்னார் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில்.15-01-2023. இன்று பொங்கல் பண்டிகை வெரு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
 இப் பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை
 மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள் மற்றும் 07 வலய 
உறுப்பினர்களிடம்
 கையளித்தார். நேற்று மாலையில் இருந்து இளைஞர்கள் ஆலயத்தில் பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்களை
 மேற்கொண்டனர்.
 குறிப்பாக ஆலய வளாகத்தை வாழை, கரும்பு, கோலங்கள் ஏனைய சோடினைகள் மூலம் அலங்கரித்தனர். 07 வலயங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடங்களில் பொங்கல் பொங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
 காலைத் திருப்பலியை அருட்பணி மாக்கஸ் அடிகளார் தலைமன்னார் மக்களுக்கு நிகழ்த்தினார். தொடர்ந்து இளைஞர்கள் தாம் பொங்கிய பொங்கலை இறைவனுக்கு காணிக்கையாக்கினர். திருப்பலியின் நிறைவில் அனைத்து வலயங்களும் தமது வலய உறுப்பினர்களுக்கு பொங்கலை வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.என்பது  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் அஃப்லாடாக்சினின் அளவை மறுபரிசீலனை

நாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஒன்றியத்தின் கூற்றுப்படி, சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் 
சதவீதத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கப்படுவதாக  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார 
இதனை தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 13 ஜனவரி, 2024

நியூசிலாந்தின் முன்னால் பிரதமர் நாற்பத்தி மூன்று வயதில் திருமணம் செய்து கொண்ட

நியூஸிலாந்து முன்னாள் பிரதமரான ஜெஸிந்தா ஆர்டெர்ன் தனது நீண்ட கால காதலர் கிளார்க் கெய்போர்டை.13-01-2024. இன்று திருமணம் 
செய்து கொண்டார்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன். இவர் கடந்த 2017 முதல் 2023 வரை நியூஸிலாந்து நாட்டின் 40வது பிரதமராக 
பதவி வகித்தார். 
இவர் பதவியில் இருந்தபோதே, பெண் குழந்தை பெற்றெடுத்தார். ஜெஸிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்கும்போதே கிளார்க் கெய்போர்டுடன் காதலில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2012ல் 
ஆக்லாந்தில் மெட்ரோ உணவக விருது நிகழ்ச்சியில் முதல்
 முறையாக சந்தித்தனர். 
அதன் பிறகு அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். கடந்த 2019 மே மாதத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது
. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து
 கொள்ளவிருந்தனர். 
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தை ஒத்தி வைத்தனர். ஜெஸிந்தா ஆர்டெர்னுக்கு தற்போது 43 வயது. கிளார்க் கெய்போர்டுக்கு 47 வயது. 
இந்நிலையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில் கிராகி ரேஞ்சில் உள்ள ஹாக்ஸ் விரிகுடாவில் இன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நெவ் என்ற ஐந்து வயது மகள் உள்ளார்.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 12 ஜனவரி, 2024

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய பெண்களுக்காக வரும் புதிய சட்டம்

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என
 பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் சட்டத்தில் இரண்டு
 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதே தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும் , வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் செல்லும் பெண்ணிகளின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர். இதன்படி 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
 இவ்வாறு பெற்றோர் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்ட 
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவர்களின் அசௌகரியத்தின் நிமித்தம்
 நீதிமன்றத்தில் 
ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொளிகள் மூலம் 
விசாரணகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 11 ஜனவரி, 2024

விற்பனைக்கனுப்பப்பட்ட கோழியிறைச்சித் துண்டுகளை பிரான்ஸில் மீளப்பெறுகின்றது

விற்பனைக்கு அனுப்பப்பட்ட பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள், மீளப்பெறப்படுகிறது. குறித்த கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கான பக்டீரியா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சந்தையில் மிகவும் பிரபலமான Loué நிறுவனத்தின் இறைச்சிகளில் ‘தொடை’ துண்டுகள் பொதிசெய்யப்பட்ட அனைத்து
 இறைச்சிகளும்
 ஜனவரி 10-01-2024- ஆம் திகதி அன்று முதல் மீளப்பெறப்படுகிறது.
 அவற்றில் listeria monocytogenes எனும் ஆபத்தான பக்டீரியா இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது விஷமுற்ற உணவாக
 கருதப்படுகிறது. அவற்றை உட்கொள்ளுவதால் ஒவ்வாமை, 
வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு உள்ளாக நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் கடமைகளை பொறுப்பேற்றனர் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்.10-01-2024. இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் 
பொறுப்பேற்ரனர் 
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எம்.ஏ.பி.சி. பெரேரா, அமீர் பாயிஸ், அனுசுயா சண்முகநாதன், லக்ஷ்மன் திஸாநாயக்க ஆகியோர் 
நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Blogger இயக்குவது.