கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) கம்பனியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான
கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக
விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குதல் தொடர்பான வழிகாட்டல்) கட்டளைகளின் 2(ஆ) இன் கீழ் குறித்த
கருத்திட்டத்தை விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காகவும், குறித்த கருத்திட்டத்தை
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக
வர்த்தமானி
அறிவித்தல் விதியொன்றின் மூலம் வெளியிட்ட பின்னர்,
குறித்த விதியை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக