நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் சட்டத்தில் இரண்டு
வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதே தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும் , வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் செல்லும் பெண்ணிகளின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர். இதன்படி 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பெற்றோர் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்ட
சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவர்களின் அசௌகரியத்தின் நிமித்தம்
நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொளிகள் மூலம்
விசாரணகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக