வியாழன், 11 ஜனவரி, 2024

விற்பனைக்கனுப்பப்பட்ட கோழியிறைச்சித் துண்டுகளை பிரான்ஸில் மீளப்பெறுகின்றது

விற்பனைக்கு அனுப்பப்பட்ட பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள், மீளப்பெறப்படுகிறது. குறித்த கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கான பக்டீரியா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சந்தையில் மிகவும் பிரபலமான Loué நிறுவனத்தின் இறைச்சிகளில் ‘தொடை’ துண்டுகள் பொதிசெய்யப்பட்ட அனைத்து
 இறைச்சிகளும்
 ஜனவரி 10-01-2024- ஆம் திகதி அன்று முதல் மீளப்பெறப்படுகிறது.
 அவற்றில் listeria monocytogenes எனும் ஆபத்தான பக்டீரியா இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது விஷமுற்ற உணவாக
 கருதப்படுகிறது. அவற்றை உட்கொள்ளுவதால் ஒவ்வாமை, 
வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு உள்ளாக நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.