புதன், 12 ஜூலை, 2017

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர்

இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. 
இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இராவணின் மாளிகை நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.
எல்ல வெல்லவாய பாதையில்  கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.
முதலில் கயிற்றின் உதவியுடனேயே
 இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும். பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கயிற்றின் உதவியுடன் கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம்
 ஒன்றினைக் காண முடியும்.
அந்த மண்டப சுவரின் அடுத்தபக்கத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து 700 - 800 அடிவரை கீழே இறங்கும் போது பேச்சு அரங்கு போன்ற ஒன்றை காணலாம்.அங்கே நீர் வீழ்ச்சி ஒன்றின் சத்தம் கேட்டு கொண்டிருக்கின்றது. அதில் இருந்து மேலும் 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறக் குளம் 
ஒன்று காணப்பட்டது.
சூரிய ஒளியைக் கண்டிராத இந்த இடத்தில் மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வந்தது என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை
அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு  வந்த கிராமவாசி
 தெரிவித்தார்.ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம் என்று குறித்த தேரர் தனது பதிவில் 
குறிப்பிட்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.