ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

நாட்டில் அங்குலானா கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் மீட்பு

நாட்டில்  அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பதினொரு கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் இருந்த வீரர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்
 தெரிவித்தார்.
கடற்படையின் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியது.
அதன்படி, ஆபத்தில் சிக்கிய கப்பலைக் கண்காணிக்கவும், மீட்பு நடவடிக்கைக்கு உதவவும் ஒரு Mi-17 ஹெலிகாப்டரும், ஒரு பெல் 412 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.