வியாழன், 27 ஆகஸ்ட், 2026

இன்றைய தினம் யாழ் தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் 
வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்  கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை  ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.