வெள்ளி, 10 ஏப்ரல், 2026

யாழில் வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

யாழில்  அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக  இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு 
முன்னெடுக்கப்பட்டது.
யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்கை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
இதன்போது சந்தியிலுள்ள சமிக்கையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள 
வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இவர்கள் வித்தியாசமான முறையில் வேடமிட்டிருந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.