ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நாட்டில் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி யோசனை

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்கு பங்களிக்கும் அனைவருக்கும் வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
தெரிவித்தார்.
ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் 19-08-2023.அன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்குகளை விரைவாக அடையக்கூடிய முன்னணி துறையாக சுற்றுலாத்துறை திகழ்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரின் அதிகபட்ச பங்களிப்பை பெறுவதே எதிர்பார்ப்பு என தெரிவித்த ஜனாதிபதி, பங்களிப்பு செய்யும் அனைத்து தரப்பினருக்கும் வசதிகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.
அத்துடன் யால தேசிய பூங்காவிற்கு நாளாந்தம் பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருவதுடன், அவர்களை இலக்கு வைத்து இப்பிரதேசத்தை விரிவான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.