சனி, 22 அக்டோபர், 2016

திடீரென காணாமல் போன யாழ். புத்தூரில் குளம் ( நிழல் படம் )

வீணாக கடலுக்குச் செல்லும் மழை நீரை தேக்கி வைத்து 'விவசாயம் பார்க்கவோ அன்றி நன்னீர் மீன் வளர்க்கவோ' தனது சொந்தக் காணியில் குளம் கட்டுகிறார்,  நல்ல சமூக சேவை மனம்
 உடைய ஒருவர். 
அந்த மனிதர் வவுனியா கனகராயன்குளத்தில் இந்த தூய பணியில் ஈடுபட்டுள்ளார். வவுனியாவுக்கு நீங்கள் பயணம் செய்யும் போது A 9 சாலை ஓரமாக கனகராயன்குளத்தில் இதைப் பார்க்கலாம். 
ஓ... எங்கள் யாழ்ப்பாணத்தில்???
புத்தூரில் உள்ள குளம் ஒன்றுக்கு மண் போட்டு மூடுகிறார், கட்டட காடு எழுப்புவதற்காக ஒருவர்.  
வெவ்வேறு சிந்தனை உடைய இரண்டு மனிதர்கள். 'முன்னவர் போல மிகச் சிலரும், பின்னவர் போல கோடி பலரும்' நம்மில் உள்ளனர். இதில் எந்த அணியின் பக்கம் நீங்கள் நிற்கப் போகின்றீர்கள்?
நிச்சயம்  இது ஒரு வினை என்றே 
கூற வேண்டும் !!!
'வினை விதைத்தவன் வினையை அறுத்தே தீர வேண்டும்' காத்திருங்கள்... கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாரி மழை வெள்ளத்துக்கு சென்னை மாநகரம் அள்ளுண்டு கடலில் மூழ்கியது போல, யாழ்ப்பாணமும் இந்தப் பேரிடரை எதிர் கொள்ளும் காலம் வெகு தூரத்தில்
 இல்லை! 
ஓ... எங்கள் யாழ்ப்பாணமே அப்போது நீ என்ன செய்வாய்? ஊர் கூடி ஒப்பாரி வைப்பதற்கு கூட அப்போது யாரும் 
இருக்க மாட்டார்களே...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.