திங்கள், 8 பிப்ரவரி, 2021

மன்னாரில் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பித்து வைப்பு-

சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி 
செய்யும்  திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக.08-02-2021. இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னாரில் ஆரம்ப நிகழ்வு 
இடம் பெற்றது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு குளம் வைபவ ரீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு   நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான  காதர் மஸ்தான்  தலைமையில் .08-02-2021இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் உத்தியோக பூர்வமாக 
 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு குளம் வைபவ ரீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு   நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான  காதர் மஸ்தான்  தலைமையில்.08-02-2021 இன்று திங்கட்கிழமை  காலை 10 மணியளவில் உத்தியோக பூர்வமாக  
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்,நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள்,நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்,உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து
 கொண்டனர்.
குறித்த திட்டம் சுமார் 8 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.