இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில்.18-04-2022. இன்று தடை உத்தரவு பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ள கோட்டை பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தடை உத்தரவு கோரிக்கையின் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பாதையில் உள்ள தடைகள் நீங்கும் என நம்புவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக