திங்கள், 6 ஜூன், 2022

இலங்கையில் ரஷ்ய விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இலங்கையில் இருந்து வெளியேற ரஷ்ய விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் 
நீக்கியுள்ளது.
ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் நாட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு சட்டமா அதிபர் இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக 
கோரியிருந்தார்.
இதனை ஆராய்ந்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கியுள்ளது இந்த விமானம் 191 பயணிகள் மற்றும் 30 பணிக்குழாமினருடன் கடந்த 2ஆம் திகதி ரஷ்ய நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் நீதிமன்ற இடைக்கால தடைக்காரணமாக கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது.
இதன்காரணமாக ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான வர்த்தக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த எரோஃப்ளொட் விமானம் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இது தொடர்பாக ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறும் கோரியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.