கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் யாழ். பொது நூலக எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப் பேரணியில் பெருமளவான இளைஞர், யுவதிகள்
பங்கேற்றுள்ளனர்
யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்”என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு இப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் யாழ. நூலகம் எரியூட்டப்பட்டது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமானது இன்றுடன் 54வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக