நாட்டில் அரச கரும மொழிகள் திணைக்களம் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரச ஊழியர்களின் மொழிப்புலமை பாடநெறிகளை இடைநிறுத்தியுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கமொன்று
தெரிவித்துள்ளது.அரச உத்தியோகத்தர்களுக்கான அரச மொழிப் புலமைப் பாடநெறிகள்
ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிமுறைகள்
காலாவதியானதையடுத்து மீண்டும் ஆரம்பிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் படி 2007ற்குப் பின்னர், பொது சேவையில் நுழைந்த அரச அதிகாரிகள் 16.10.2020ற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டாம் மொழி புலமை தொடர்பான பாடநெறியை நிறைவு செய்ய வேண்டும். இல்லையெனில், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை இழக்க நேரிடும்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் போதிய ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், மொழிப் பாடநெறிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்கும் திறனை அரச கரும மொழிகள் திணைக்களம் இழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம்
தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த பெருமளவிலான ஆசிரியர்களும், அதிபர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் மொழிப் புலமையை நிறைவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், அவர்களது அலுவல் மொழிப் புலமையைப் பூர்த்தி செய்யாமல் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்படுவதால், தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.இது தொடர்பில்
அவதானம் செலுத்தி அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப் புலமையை பூர்த்தி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை
நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரச
நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக