திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழ் இலக்கணமாலை” ஆசிரியர்களுக்கான இணையவழிச் செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றன

தமிழ்ச்சோலைகளின் ஆசிரியவாண்மையை மேம்படுத்தும் நோக்காகக் கொண்டு, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மற்றும் ஐக்கிய இராச்சியக் கிளையினதும் ஆதரவுடன், ‘தமிழ் இலக்கணமாலை” என்னும் தலைப்பில் சூம் செயலி ஊடான இணையவழிச் செயலமர்வு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால்  25.04.2021.அன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் (பிரித்தானிய நேரம் 13.00மணி) 
நடாத்தப்பட்டது.
இலக்கணத்தை எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்னும் பிரிவுகளாக மிகவும் இலகுவான நடையில் தாய்த்தமிழகத்தில் இருந்து பேராசிரியர் திருமதி பி.விஜயலட்சுமி அவர்கள் நடாத்தியிருந்ததுடன் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் இலகுநடையில் பதிலளித்திருந்தார்.
அகவணக்கத்தோடு தமிழ்ச்சோலை ஆசிரியை சிவானுஜா குமணன் அவர்கள் செயலமர்வை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து
 வரவேற்புரையை தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் சார்பில் ஆசிரியை 
விஜகலா செல்வநாயகம் அவர்கள் வழங்கியிருந்தார். தொகுப்புரையை தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் சார்பில் ஆசிரியை திருமதி எம்.றேணுகா அவர்களும் ஐக்கிய இராச்சியக்கிளையின் சார்பில் ஆசிரியை திருமதி கெங்காதரன் அவர்களும் நன்றியுரையினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனையின் சார்பில் ஆசிரியர் திரு.அகிலன் அவர்களும்
 ஆற்றியிருந்தனர்.
நிறைவாகக் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலரும் பேராசிரியருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமது நன்றியறிதலைத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயலமர்வுகளை மேலும் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் கேட்டுக்கொண்டனர். தமிழ் இலக்கணத்தை கசப்பின்றி இவ்வாறும் நுணுக்காமாகக் கற்பிக்கலாம் என்பதைத் தாம் அறிந்து கொண்டதாகவும் ஆசிரியர்கள் பலரும் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
செயலமர்வை நடாத்திய பேராசிரியர் திருமதி பி.விஜயலட்சுமி அவர்கள், செயலமர்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரின் கல்வித் தேடல்கள் குறித்து மிகவும் உணர்வோடு பாராட்டியதுடன், ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற வகையில் இன்றைய செயலமர்வில் சொற்ப நேரத்தில் எல்லா விடயங்களையும் கூறமுடியாத 
நிலையை உணர்த்தி, மீண்டும் தான் குறித்த 
செயலமர்வை நடாத்துவேன் எனவும் இயல்புநிலை திரும்புமிடத்து நேரடியாகக் கலந்துகொண்டு செயலமர்வை முழுநாள் செயலமர்வாக நடாத்தத் தான் ஆவலோடு உள்ளதாகவும் உறுதியோடு தெரிவித்து விடைபெற்றார்.
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் செயலமர்வின் நிறைவுவரை 400 இற்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பிரான்சு மற்றும் பிரித்தானியாவில் இருந்து கலந்து பயனடைந்தமை 
பாராட்டத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.