உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன்
ஆலயத்தில் 21-04-2021.இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய
கடும்போக்காளர்களால்
குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அத்தாக்குதலில் பலியான மக்களை
நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள்
இடம்பெற்றதுடன், இறந்தவர்களிற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்விருட்சம் சமூக
ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரபாகரக்குருக்கள்,சந்திரகுமார் கண்ணன்,தமிழருவி த.சிவகுமாரன்,நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,கிராமசேவையாளர்
மற்றும் சமூகஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது
.கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர
விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250 இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி
நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் ,
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு , மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக