மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள்
கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராஹூல பகுதியில் வசித்து வரும் நபர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக