புதன், 14 அக்டோபர், 2020

ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பது குறித்து ஆராய்வு

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் உண்டா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.13-10-20,நேற்றைய தினம் வரையில் பதிவான கொரோனா
 நோய்த்தொற்றாளிகளில் ஒரு தொகுதியினர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி
 தெரிவித்துள்ளார்..13-10-20,நேற்றைய தினம் பதிவான 194 கொரோனா தொற்றாளிகளில் தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சாராதவர்கள் அதிகளவில் 
காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க நேரிட்டால்
 அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என சவேந்திர சில்வா சிங்கள இணையத் தளமொன்றுக்கு 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.