வெள்ளி, 9 அக்டோபர், 2020

உள்ளாடைக்குள் போதைவஸ்து கடத்தி வந்த மலேசி விமானப் பணிப்பெண்

 

தனது மகளின் மருத்துவக் கட்டணங்களுக்காக பணம் சேர்ப்பதற்காக தனது மார்புக்கச்சை மற்றும் உள்ளாடைகளிற்குள் ஹெரோயின் கடத்திய விமானப் பணிப்பெண் ஒருவர் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை
 விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவை சேர்ந்த ஜெய்லி ஹனா ஜைனல் (40) தனது உள்ளாடைகளில் 20 தடவைகளுக்கு மேல் போதைப்பொருட்களை
 மறைத்துக் கொண்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.இதற்காக அவர் நீண்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்துவதற்கு 
வசதியாக, அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது தனது தொடைகளுக்கு இடையில் மணல் நிரப்பப்பட்ட பொதியுடன் நம்பிக்கையுடன் நடக்க மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்ததாக
 கூறினார்.போதைப்பொருளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் சென்று, மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்ட வலையமைப்பில் அவர் முக்கிய பங்கு 
வகித்தார்.இருப்பினும் நீதிபதி மைக்கேல் காஹில், விமானப் பணிப்பெண் குற்றம் செய்ய காரணமாக அமைந்த பின்னணி காரணிகளில் கவனம் செலுத்தி, அவரது தண்டனையை மென்மையாக்க தகுதியுடையவர் என்றார்.ஜைனலின் மகள் மியாவுக்கு பிறப்பிலிருந்தே அசாதாரண
 நிலைமையிருந்தது. அவளுக்கு ஒரு வயதுக்கு முன்பே மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. இப்போது 
ஒன்பது வயதான சிறுமிக்கு இன்னும் தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுகிறது.மகளின் மருத்துவ தேவைக்கு 
நிதி திரட்ட முடியாமல் திண்டாடிய
 ஜெய்லி ஹனா ஜைனல், கடைசி முயற்சியாக குற்ற வாழ்க்கைக்கு திரும்பினார்.போதைப்பொருள் விற்பனையின் முன்னர் கேக் வகை உள்ளிட்டவற்றை விற்பனை செய்தார். அப்போது- 2018 மார்ச்சில் அவர்களை ஒரு போதைப்பொருள் கடத்தல்
 கும்பல் அணுகியது.
நீதிபதி காஹில், குண்டர்கள் “அவளது பாதிப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்” என்றார்.அவுஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கல் டிரான் என்பவரால் இந்த போதைப்பொருள் வலையமைப்பு இயக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனைக்கு 
காத்திருக்கிறார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.