சீனஅரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபாய்) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9ம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை
வழங்கியுள்ளது.
இதேவேளை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் இருந்து கடனாக பெறவும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக