நாட்டில் இதுவரையில் அரச அலுவலகங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் மிகவும் அச்சமற்ற, துணிச்சலான
தீர்மானத்தை எடுத்தனர்.
இந்த நாடு நீண்டகாலமாக ஊழல்வாதிகளால் ஆளப்பட்டது. நாட்டின் வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. கஜானா செல்வம் பயன்படுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவருக்கு இந்த வீடு கிடைத்துள்ளது.
எனவே பொதுமக்களின் சொத்தை தங்கள் சொந்த சொத்தாக பயன்படுத்தியவர்களை, அரசு வீடுகளில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக