அரசியல் சார்பு அடிப்படையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் செல்வாக்கு இருக்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடுத்த வருடம் நாட்டில் 5 புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி முதலீட்டுச் சபை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு நன்மை பயக்கும் சுத்தமான முதலீடுகளை கொண்டு வருவதற்கு இலங்கை முதலீட்டு சபைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பாரிய பொறுப்பு முதலீட்டுச் சபைக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே முதலீட்டுச் சபை தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும், முதலீட்டுச் சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடம் நாட்டில் 5 புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக