ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை

நாட்டில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற 
உறுப்பினர் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரிடம் வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை. இன்று  ஆரம்பித்துள்ளனர்.
 வல்வெட்டித்துறையில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அவரது 70வது பிறந்த நாள் நிகழ்வு வெகு சிறப்பான முறையில் பொதுமக்களினால் கொண்டாடப்பட்டிருந்தது.
 இந்நிலையில் குறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் வல்வெட்டித்துறை
 பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 இதுதொடர்பில் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்கள் பலர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.