வடக்கு,கிழக்கு உட்பட பல்ாறு மாகாணங்களின் ஆளுநர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து புதிய ஆளுநர்களை
நியமிக்க உள்ளார்.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு அதிபர், புதிய ஆளுநர்களை நியமிப்பார் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு தற்போதைய ஆளுநர்கள் அல்லது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், பெரும்பாலான அரசு நிறுவனங்கள்,
கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டபூர்வ நிறுவனங்களில் தற்போதுள்ள தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவை நீக்கிவிட்டு புதிய நியமனங்களை மேற்கொள்ளவும்
அரசு முடிவு செய்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக